நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 06, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 06, 2019

தேசிய செய்திகள்

நாகாலாந்து
டிஸுகோ[Dzükou] பள்ளத்தாக்கு பிளாஸ்டிக் இல்லா மண்டலம் ஆகிறது
 • நாகலாந்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தின் போது, டிஸுகோ பள்ளத்தாக்கு பிளாஸ்டிக் இல்லா மண்டலமாக மாறியுள்ளது. மிகவும் பாராட்டப்படக்கூடிய முன்முயற்சியான இந்த அழகிய பள்ளத்தாக்கை ‘பிளாஸ்டிக்-இல்லா மண்டலம்’ ஆக அறிவித்தது, தெற்கு அங்கிமி இளைஞர் அமைப்பால் எடுக்கப்பட்ட முயற்சியாகும் (SAYO). இந்த அமைப்பு சுற்றுச்சூழலை பேணிப் பாதுகாப்பதற்காக உறுதிமொழி எடுத்துள்ளது.
புது தில்லி
மருத்துவ மாணவர்களுக்கு 24X7 ஹெல்ப்லைன்
 • இந்திய மருத்துவ சங்கம் அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் கற்பிக்கும் நிறுவனங்களில் ஆலோசனை மையங்களை அமைக்க மற்றும் மனநல சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக மாணவர்களுக்கு உதவ 24×7 ஹெல்ப்லைன் உதவி மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. மனநல சுகாதார சவால்களை எதிர்கொள்ளவும், குடியிருப்பவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இடையில் தற்கொலை சம்பவங்களை குறைப்பததற்காக மருத்துவர்களுக்காக மருத்துவர் (D4D) என்ற பெயரில் ஒரு அமைப்பை IMA தொடங்கியுள்ளது.
ஸ்வச் ஸர்வேக்ஷன் 2020
 • மத்திய வீடுப்புற மற்றும் நகர்ப்புற அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி புது தில்லியில் ஸ்வச் ஸர்வேக்ஷன் 2020 லீக்கை  தொடங்கிவைத்தார்.
 • ஒரு மூன்றாம் தரப்பினரால் நடாத்தப்படும் ஸ்வச்  ஸர்வேக்ஷன்   கணக்கெடுப்பின் நோக்கம் , பெரிய அளவிலான குடிமக்களின்  பங்கேற்பை ஊக்குவிப்பது , குப்பை மற்றும்  திறந்த வெளி கழிப்பறை இல்லா  நகரங்களை ஏற்படுத்துவதும் மேலும்  சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி நகரங்களில் வாழ ஒரு நல்ல இடத்தை ஏற்படுத்துவது ஆகும்.

சர்வதேச செய்திகள்

ரஷ்யா முதல் ஆர்க்டிக் ரயில் சேவையை தொடங்குகியுள்ளது
 • ரஷ்யாவின் முதல் சுற்றுலா ரயில் சேவை ஆர்க்டிக் இருந்து நோர்வே வரை செல்லும் ரயிலில் சுமார் 91 பயணிகளுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நிலையத்திலிருந்து பயணத்தை தொடங்கியது. இரயிலுக்கு “Zarengold”  என பெயரிடப்பட்டுள்ளது,இது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நிலையத்திலிருந்து  Petrozavodsk, Kem மற்றும் Murmansk வழியாக நோர்வே சென்றடைகிறது.

விண்வெளி அறிவியல்

சீனா லாங் மார்ச் 11 கடல் வழி ராக்கெட் ஒன்றை செலுத்தியது.
 • சீனா முதன் முறையாக கடலில் இருந்து ஒரு விண்வெளி ராக்கெட் ஒன்றை செலுத்தியது. லாங் மார்ச் 11 ராக்கெட்டை எல்லோ கடலில்(Yellow Sea) இருந்து ஒரு கப்பல் மூலம் செலுத்தப்பட்டது.
 • சீனா தற்போது சிவில் மற்றும் இராணுவ விண்வெளி திட்டங்கலான நிலவுக்கும் அதற்கு அப்பாலும் பயணிப்பதற்கான திட்டங்களில் ரஷ்யாவையும் ஜப்பானையும் விட அதிகமாக செலவழிக்கிறது.

வணிக  மற்றும் பொருளாதார செய்திகள்

உலகளாவிய வளர்ச்சி 2019 ஆம் ஆண்டில் மந்தமாக இருக்கும் என்று உலக வங்கி அறிவித்தது
 • உலக வங்கி 2019 ம்  ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி6% ஆகும் என்று அறிவித்துள்ளது. இது ஜனவரி மாதத்தின் அறிவிப்பை விட 0.3% குறைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் வளர்ச்சி 2.7% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு ஆண்டுக்கு 7.5% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018 ம் ஆண்டின்  வளர்ச்சி விகிதம் 7.2% ஆக இருந்தது .

வங்கி செய்திகள்

RBI வட்டி விகிதத்தை 25 bps குறைத்து , GDP வளர்ச்சி 7% என திருத்தியமைத்துள்ளது
 • இந்திய ரிசர்வ் வங்கியின் ஆறு உறுப்பினர்களின் பணவியல் கொள்கைக் குழு (MPC), இந்த ஆண்டு மூன்றாவது கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.75% என தெரிவித்துள்ளது.. ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை 7.2 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக திருத்தியுள்ளது.
சீனாவின் வங்கி இந்தியாவில்  செயல்பாடுகளை தொடங்கியது
 • சீனாவின் நான்கு மிகப் பெரிய அரச வர்த்தக வங்கிகளுள் ஒன்றான சீன வங்கி இந்தியாவில் தனது முதல் கிளையை மும்பையில் தொடங்கி உள்ளது.
 • “இந்தியாவில் சீன வங்கியின் துவக்கம் 2018 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையேயான மூலோபாய ஈடுபாட்டை வலுப்படுத்த இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இடையே நடந்த வெற்றிகரமான சந்திப்புகளுக்குப் பின்னர் தொடங்கப்பட்டதாகும்

விளையாட்டு செய்திகள்

சர்வதேச ஹாக்கி தொடர் ஆண்கள் இறுதிப் போட்டி
 • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் ஆண்கள் ஹாக்கி இறுதி தொடர் புவனேஷ்வரில் துவங்கியது. காலையில் நடைபெற்ற முதல் போட்டியில், அமெரிக்கா 2 கோல்களில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது. இரண்டாவது போட்டி போலந்து மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே நடைபெறும். ரஷ்யாவுக்கு எதிராக எட்டு முறை சாம்பியன்வென்ற இந்தியா தனது ஆட்டத்தை தொடங்க உள்ளது.
இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணி காண்டர் பிட்ஸ்ஜெரால்ட் U21 ஐ கைப்பற்றியது
 • அயர்லாந்தின் டப்ளினில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணி காண்டர் பிட்ஸ்ஜெரால்ட் U21 சர்வதேச 4 நாடுகளின் பட்டத்தை வென்றது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 06, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!