நடப்பு நிகழ்வுகள் – மே 14 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மே 14 2019

தேசிய செய்திகள்

I & B செயலாளர் அமித் காரே தலைமையில் இந்திய பிரதிநிதிகள் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றனர்

  • இந்தியா பெவிலியன் கேன்ஸ் திரைப்பட விழாவில் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி முதல் 25 ம் தேதி வரை திறந்து வைகைப்பட உள்ளது. இந்த வருடம் I & B செயலாளர் அமித் காரே தலைமையில் இந்திய பிரதிநிதிகள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீட்டித்தது

  • 1967 ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் கீழ், ஐந்து ஆண்டுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்து அறிவித்தது.

CTBTO கூட்டங்களில் பார்வையாளராக இருக்க இந்தியாவிற்கு அழைப்பு

  • விரிவான சோதனை தடை ஒப்பந்தத்தின் (CTBTO) நிர்வாகச் செயலாளர், லசினா செர்போ, CTBT இல் ஒரு பார்வையாளராக இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் பார்வையாளராக இருப்பதால், சர்வதேச கண்காணிப்பு அமைப்பின் தரவுகளை அணுக இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும், இந்த வசதி 89 நாடுகளில் உள்ள 337 வசதிகளை பயன்படுத்த வழிவகுக்கும்.

இந்திய காண்டாமிருகத்திற்கு டி.என்.. தரவுத்தளம் அமையவுள்ளது

  • இந்திய நாட்டில் உள்ள அனைத்து காண்டாமிருகத்தின் டிஎன்ஏ விவரங்களையும் உருவாக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டம் ஒன்றை துவக்கியுள்ளது. 2021ம் ஆண்டுக்குள், இந்திய காண்டாமிருகம் இந்தியாவில் அதன் அனைத்து இனங்களின் டி.என்.ஏ-வரிசைமுறையை கொண்டிருக்கும் முதல் காட்டு விலங்கு வகைகளாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவில் சுமார் 2,600 காண்டாமிருகங்கள் உள்ளன, அவற்றில் 90% அசாமின் காஸிரங்கா தேசிய பூங்காவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை

ஆஸ்கார் அகாடமி தலைவர் மராத்தி திரைப்பட விருதுகள் விழாவில் பங்கேற்க உள்ளார்

  • மகாராஷ்டிரா மாநில மராத்தி திரைப்பட விருதுகள் விழாவில் சிறப்பு விருந்தினராக மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் அகாடமி தலைவரான ஜான் பெய்லி பங்கேற்க உள்ளார். இதன் மூலம் இந்தியாவில் நடைபெறும் ஒரு விருது விழாவில் பங்கேற்கும் முதல் அகாடமி தலைவர் ஆனார் ஜான் பெய்லி.

சர்வதேச செய்திகள்

சோச்சியில் புதினை சந்திக்கவுள்ளார் பம்பியோ

  • ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஒரு உயர் இராணுவ விமான சோதனை மையத்திற்கு சென்று புதிய ஆயுதங்களை ஆய்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ஆண்டிற்குப்பிறகு மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான மிக உயர்மட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது, இதில் ரஷ்ய ஜனாதிபதி புதினை சோச்சியில் உள்ள ரிசார்ட்டில் திரு.பம்பியோ சந்திக்கவுள்ளார்.

சீன கடற்படை இரண்டு புதிய கைடட் மிஸைல் டெஸ்ட்ராயரை அறிமுகப்படுத்தியது

  • சீன கடற்படை மேலும் இரண்டு புதிய கைடட் மிஸைல் டெஸ்ட்ராயரை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் இத்தகைய ஏவுகணைகளின் எண்ணிக்கை 20வது ஆக உயர்ந்துள்ளது.
  • சீன வரலாற்றில் முதல் முறையாக சீன கடற்படை இந்தியப் பெருங்கடலில் டிஜிபோட்டியில் லாஜிஸ்டிக் தளங்களைக் கொண்டுள்ளது. அது மட்டுமின்றி அரபிக் கடலில் உள்ள பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு செய்திகள்

டி.ஆர்.டி.. அபியாஸ்[ABHYAS] விமான சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது

  • ஒடிசாவின் சண்டிபூரில் உள்ள இடைக்கால டெஸ்ட் ரேஞ்ச் மையத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ), அபியாஸ்[ABHYAS] எனும் அதிவேக எக்ஸ்பெண்டபிள் வான்வழி இலக்கை (HEAT) வெற்றிகரமாக விமான சோதனை செய்தது.

அமெரிக்க கடற்படைத் தளபதி இந்தியா விஜயம்

  • இந்திய கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை ஆகியவை இருதரப்பு மற்றும் பன்முக மன்றங்களில் தொடர்ந்து கலந்துரையாடுவதோடு மலபார் மற்றும் ரிம்பாக்[RIMPAC] போன்ற கடல் பயிற்சிகளிலும் பங்கேற்கின்றன. மே 12 முதல் மே 14 வரை அமெரிக்க கடற்படைத் தளபதியான அட்மிரல் ஜான் மைக்கேல் ரிச்சர்ட்சன் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணமாக வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு செய்திகள்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்

  • ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவர் வெல்லும் மூன்றாவது மாட்ரிட் ஓபன் டென்னிஸ் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 33 முறை மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடால் சாதனையை இந்த வெற்றியின் மூலம் சமன் செய்தார் ஜோகோவிச்.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 14 2019

Daily Current Affairs – May 14 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!