நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 11, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 11, 2019

தேசிய செய்திகள்

பிரதமர் ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஆண்டு திட்ட ஆவணம் தயாரிக்குமாறு வலியுறுத்தல்

 • பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு அமைச்சகத்தின் மேல் அதிகாரிகளிடம் நன்கு திட்டமிடப்பட்ட இலக்குகளுடன் கொண்ட ஐந்தாண்டு திட்ட ஆவணம் ஒன்றை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இத்திட்டத்திற்கு அனுமதி 100 நாட்களுக்குள் வழங்கப்படும். ஒவ்வொரு துறையிலும் விளைவுகளையும் செயல்திறனையும் மேம்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்த செயலாளர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர பிரதேசம்

ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பயனளிக்கும் ஐ.நா. திட்டம்

 • ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தின் பசுமை காலநிலை நிதியம் (GCF) கீழ் ஆந்திர பிரதேச மாநில வனத்துறை ஒன்பது நிலப்பரப்புகளை, சதுப்பு நிலங்களை அடையாளம் கண்டுள்ளது. இது தட்பவெப்ப நிலை மாற்றித்தினால் பாதிப்புக்குள்ளாகிய ஆயிரக்கணக்கான கடலோர குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும்.
 • மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்கள் UNDP இன் கீழ் தேர்வு செய்யப்பட்டு, இந்த ஆண்டு துவங்கும் ஆறு ஆண்டு திட்டத்திற்கு ரூ.298 கோடிக்கு GCF வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக சுமார் 25 இயற்கை நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்பது இடங்கள் ஆந்திராவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர்

மணிப்பூரைச் சேர்ந்த நபர் வாட்ஸ் அப்பில் பக்கை கண்டறிந்து, பேஸ்புக் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இணைந்தார்

 • வாட்ஸ் அப்பில் பயனர் தனியுரிமையை மீறுகிற பக்கை கண்டறிந்த மணிப்பூரைச் சேர்ந்த நபரை பேஸ்புக் கௌரவித்துள்ளது.
 • மணிப்பூரைச் சேர்ந்த 22 வயதான சிவில் பொறியியலாளர் ஜோனெல் சூகைஜம், வாட்ஸ் அப்பில் பக்கை கண்டறிந்ததற்காக மாபெரும் சமூக ஊடகம் தனக்கு 5000 டாலர் வழங்கியதாகவும், மேலும் அவரை பேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம் 2019 பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான ‘பேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம்’ 94 பேர் பட்டியலில் தற்போது திரு. சூகைஜம் பெயர் 16வது இடத்தில் உள்ளது.

ஒடிசா

ஒடிசா பொது விநியோக முறையில் ராகி வழங்க திட்டம்

 • பழங்குடியினரின் பொருளாதாரத்தை வளர்க்கவும், பழங்குடிப் பொருளாதாரத்திற்கு மிகுந்த உற்சாகத்தை வழங்கவும், ஒடிசா அரசாங்கம், பொது விநியோக முறையில், அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொது விநியோக முறையில் ரூபாய் ஒன்றிற்கு ஒரு கிலோ ராகி(தினை) வழங்க முடிவு செய்துள்ளது.

சர்வதேச செய்திகள்

கனடா நாட்டில் 2021ம் ஆண்டு முதல் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்குகள் தடை

 • கனடா நாட்டின் பிரதமர், ஜஸ்டின் ட்ரூடியூ ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளை பயன்படுத்த 2021 ம் ஆண்டு முதல் தடை செய்வதாக அறிவித்துள்ளார். சுமார் 70 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகளான ஒற்றை பயன்பாட்டு பொருட்கள் கடல் சூழலை மாசுபடுத்துகின்றன.
 • கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து கியூபெக்கில் கடந்த ஆண்டு நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் உலகின் பெருங்கடல்களில் மாசு ஏற்படுவதற்கு  எதிராக ஒரு புதிய சாசனம் ஏற்படுத்தினர். அமெரிக்காவும் ஜப்பானும் இந்த ஒப்பந்தத்தில் சேரவில்லை.

அறிவியல் செய்திகள்

இரு சக்கர வாகனங்களுக்கு BS-VI விதிமுறைகளை வெளியிடப்பட்டன

 • இரு சக்கர வாகனங்களுக்கு பாரத ஸ்டேஜ்-VI (BS – VI) விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. புதுடில்லியில் (BS – VI) விதிமுறைகளுக்கான இந்தியாவின் முதல் வகை ஒப்புதல் சான்றிதழை , தானியங்கு தொழில்நுட்பத்தின் சர்வதேச மையத்தின் (ICAT) இயக்குனர் தினேஷ் தியாகி வெளியிட்டார். வாகன உமிழ்வு மூலம் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, BS – VI விதிமுறைகளை 2020 ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் அமைச்சரவை ஒப்புதல்

தூத்துக்குடியில் உள்ள வி.ஓ.சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட் CWC உடன் ஒப்பந்தம்

 • தொழில் செய்ய உகந்த நாடு திட்டத்தின் கீழ் இ- சீல் செய்யப்பட்ட தொழிற்சாலை ஏற்றுமதி கொள்கலனின் நேரடி போர்ட் நுழைவு (DPE) வசதிக்காக தூத்துக்குடியில் உள்ள வி.ஓ.சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட் மற்றும் மத்திய கிடங்குக் கழகம் (CWC) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
 • நேரடி போர்ட் நுழைவு வசதி (DPE), 24/7 என்ற அடிப்படையில் எந்த கொள்கலன் சரக்கு நிலையத்திலும் இடைநிலை கையாளுதல் இல்லாமல் தொழிற்சாலைகளிலிருந்து நேரடியாக போர்ட்டிற்கு இயக்க வழிவகுக்கும்.

IRSDC மற்றும் பிரெஞ்சு தேசிய இரயில்வே இடையே முத்தரப்பு உடன்படிக்கை ஒப்பந்தம்

 • IRSDC, இந்தியாவில் ரயில்வே நிலைய வளர்ச்சி திட்டத்தை மேற்கொள்ள ஆதரவளித்து தொழில்நுட்ப கூட்டணி அமைத்தது பிரெஞ்சு தேசிய இரயில்வே. பிரெஞ்சு நிறுவனமான AFD, பிரெஞ்சு தேசிய இரயில்வே (SNCF) மையங்கள் மற்றும் இணைப்புக்கள் மூலம் 7,00,000 யூரோ நிதி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது IRSDC அல்லது இந்திய இரயில்வே மீது எந்தவொரு நிதி பொறுப்பையும் விதிக்காது.

விருதுகள்

லலிதகலா அகாடமி விருதுகள்

 • இந்த ஆண்டுக்கான கேரளாவின் லலிதகலா அகாடமி புகைப்பட விருதுக்கு மூக்குத்தலாவின் முகம்மது சபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது புகைப்படம் ‘டெட்லி லைன்ஸ்’ அவருக்கு இந்த விருதை பெற்றுத்தந்தது. செங்கலத்தின் கே.கே. சுபாஷ் கார்ட்டூன் விருதை வென்றார். இந்த விருதுக்கு அவரது ‘விஸ்வாசம் ராக்ஷதி’ கார்ட்டூன் தேர்வு செய்யப்பட்டது.

விளையாட்டு செய்திகள்

யுவராஜ் சிங் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

 • இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன் மூலம் அவரது 19 வருட கால கிரிக்கெட் வாழ்க்கை நிறைவடைந்தது. தென்னாப்பிரிக்காவில் 2007 ஆம் ஆண்டு உலக டி 20 கிரிக்கெட்டில் யுவராஜ் ஒரு ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்து சாதனை படைத்தார். ஒரு சர்வதேச போட்டியில் இந்த சாதனையை அடைந்த இரண்டாவது வீரர் (ஹெர்செல் கிப்ஸ் பிறகு) யுவராஜ் ஆவார்.

UEFA பட்டத்தை வென்றது போர்ச்சுகல்

 • UEFA தேசிய லீக் போட்டியில் வெற்றி பெற்ற முதல் அணி போர்ச்சுகல் ஆகும். இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. போர்ச்சுகல் அணிக்காக கோன்காலா குயெட்ஸ் ஒரு கோலை அடித்தார்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 11, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!