நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 19 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 19 2019

தேசிய செய்திகள்

தமிழ்நாடு

தி.மு.., ...தி.மு.. தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன

  • தி.மு.க. தலைவர் எம்.கே. ஸ்டாலின் சென்னையில் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அ.இ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

மதுரை மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது

  • மதுரை மக்களவை தொகுதிகளில், கூடுதலாக இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்த தகவலை சென்னையில் வழங்கினார். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடும் உலகப்புகழ்பெற்ற மதுரை மாநகரில் நடைபெறும் பிரபலமான கள்ளழகர் திருவிழாவைக் கருத்தில் கொண்டு இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

மும்பை பயங்கரவாத தாக்குதல்கள் மிகவும் மோசமானது என சீனா அறிவிப்பு

  • பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்திய 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமானது என சீனா அறிவித்தது.

இடாய் சூறாவளியால் மூன்று தென் ஆப்பிரிக்க நாடுகளில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

  • மொசாம்பிக், ஜிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் இடாய் புயலின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர்; நூற்றுக்கணக்கானவர்கள் காணவில்லை மறறும் பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
  • அருகருகே உள்ள மூன்று தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1.5 மில்லியன் மக்கள் இடாய் புயலில் சிக்கி கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக ஐநா மற்றும் அரசு உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

.நா. காப்புரிமை தரவு பட்டியலில் ஆசிய நாடுகள் எழுச்சி

  • கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சர்வதேச காப்புரிமை பயன்பாடுகளில் பாதிக்கும் மேலாக ஆசியாவிலிருந்து வந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதன்மூலம் புதுமை பற்றிய காப்புரிமை அடையாளம் மேற்கத்திய நாடுகளிலிருந்து கிழக்கு நாடுகளை நோக்கி நகர்வதாகக் கூறியது ஐ.நா.
  • 2018ஆம் ஆண்டில் அதிக காப்புரிமை விண்ணப்பங்களுக்கான பட்டியலில் அமெரிக்கா முதலிடம்.
  • இந்தியா கடந்த ஆண்டில் பிற நாடுகளைக் காட்டிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. 2017ம் ஆண்டில் 1,583 காப்புரிமை விண்ணப்பங்களிலிருந்து 27 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்து 2013 காப்புரிமை விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளது.

வணிகம் & பொருளாதாரம்

குடியிருப்பு மனைகளுக்கான புதிய ஜிஎஸ்டி வீதங்களின் மாற்றீட்டு திட்டத்திற்கு ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி

  • ஜிஎஸ்டி கவுன்சில் புதிய கட்டணங்கள் மற்றும் சேவை வரி விகிதங்களை மாற்றுவதற்கான திட்டத்தை ஒப்புக் கொண்டது, இதன் கீழ் கட்டப்பட்டு வரும் கட்டடங்களை திருத்தப்பட்ட குறைந்த கட்டணத்தில் [உள்ளீட்டு வரிக் கடன் இல்லாமல்] மாற்றலாம் அல்லது முந்தைய விகிதங்களை பின்பற்றலாம்.

தரவரிசை & குறியீடு

BWF பேட்மிண்டன் தரவரிசை

பெண்கள்

1) தை சூ யிங் 6) பி வி சிந்து 9) சாய்னா நேவால் 94) ரியா முகர்ஜி

ஆண்கள்

1) கெண்டோ மொமொட்டா 7) கிதாம்பி ஸ்ரீகாந்த் 14) சமீர் வர்மா 19) பி சாய் பிரணீத்

மாநாடுகள்

இந்தியாவில்ஆப்பிரிக்கா திட்டக் கூட்டுறவுக்கான 14 வது CII-EXIM வங்கிக் கூட்டம்

  • இந்தியா-ஆப்பிரிக்கா திட்டக் கூட்டுறவுக்கான 14 வது CII-EXIM வங்கிக் கூட்டம் புது தில்லியில் முடிவடைந்தது. இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, இந்திய EXIM வங்கி மற்றும் இணைந்து இந்த மூன்று நாள் மாநாட்டை ஏற்பாடு செய்தது.

விஜிலென்ஸ் கூட்டத்திற்கு ஸ்டீல் அமைச்சகம் ஏற்பாடு

  • ஸ்டீல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் விஜிலென்ஸ் கூட்டம் புது தில்லியில் முடிவடைந்தது. தொடர்ச்சியான நடவடிக்கைகள், ஒப்பந்தங்கள், பணியாளர்கள் மற்றும் நிதி உட்பட பல்வேறு செயல்பாடுகளைச் சார்ந்த முக்கிய நிர்வாக மற்றும் வர்த்தக முடிவுகளை எடுக்கும் போது அடிப்படை கொள்கைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றுவதன் மூலம், ஸ்டீல் பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளை உணர்த்துவதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

நியமனங்கள்

  • புதிய கோவா முதல்வராக பதவியேற்றார் – பிரமோத் சாவந்த்
  • மகாராஷ்டிராவுக்கு சிறப்பு செலவின கண்காணிப்பாளர் – ஷைலேந்திர ஹந்தா
  • தமிழ்நாட்டிற்கான சிறப்பு செலவின கண்காணிப்பாளர் – மது மஹாஜன்

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஐபிபிஐ மற்றும் செபி இடையே ஒப்பந்தம்

  • தொழில் முனைவோர் மற்றும் கடன் சந்தையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்திய திவால் மற்றும் வாராக்கடன் வாரியம் (ஐபிபிஐ) – இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்தானது.

பாதுகாப்பு செய்திகள்

IND-INDO ​​CORPAT

  • 19 மார்ச் முதல் 04 ஏப்ரல் 2019 வரை இந்திய-இந்தோனேசியா ஒருங்கிணைந்த ரோந்துப் பிரிவின் (IND-INDO ​​CORPAT) 33வது பதிப்பின் திறப்பு விழாவில், பங்கேற்பதற்காக இந்தோனேசியா கடற்படை கப்பல் மற்றும் கடல்வழி ரோந்துக்கப்பல் போர்ட் பிளேர், அந்தமான் & நிக்கோபார் தீவிற்கு வந்தடைந்தது.

மித்ர சக்தி இராணுவப்பயிற்சி

  • மித்ர சக்தி இராணுவப்பயிற்சி ஆண்டுதோறும் இராணுவ இராஜதந்திர மற்றும் தொடர்புகளின் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் இலங்கை இடையே நடத்தப்படுகிறது. 2018-19 ஆம் ஆண்டுக்கான கூட்டு பயிற்சி 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி இலங்கையில் நடத்தப்படும்.

விளையாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தான் முதல் டெஸ்ட் வெற்றி பெற்றது

  • உத்தராகாண்ட் டெஹ்ராடூனில் நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்து அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது.

சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு

  • அபுதாபியில் நடைபெறும் சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப் போட்டியில் இந்தியா மொத்தம் 188 பதக்கங்களை வென்றுள்ளது. 50 தங்கம், 63 வெள்ளி மற்றும் 75 வெண்கலப் பதக்கங்கள் இதில் அடங்கும்.

அபுதாபியில் ஐந்து ஆண்டுகளுக்கு டி10 கிரிக்கெட் லீக் போட்டி நடத்த ஒப்பந்தம் கையெழுத்தானது

  • அபுதாபியில் உள்ள சயீத் கிரிக்கெட் அரங்கில் 2019ம் ஆண்டு முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டி10 கிரிக்கெட் லீக் போட்டி நடத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஐஎஸ்எஸ்எஃப் ஷாட்கண் துப்பாக்கிச்சூடு உலகக் கோப்பை

  • மெக்ஸிகோவின் அசபுல்கோவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஷாட்கண் துப்பாக்கிச்சூடு உலகக் கோப்பை ஆண்கள் டிராப் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றார்.

பிசிசிஐக்கு ரூ.11 கோடி இழப்பீடு தொகையை பிசிபி செலுத்தியது

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சர்ச்சை தீர்ப்புக் குழுவிடம் தொடுத்த வழக்கில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை [இந்திய ரூபாய் மதிப்பில் பதினொரு கோடிக்கு மேல்] இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு (BCCI) இழப்பீடாக செலுத்தியது.

PDF Download

வீடியோவைக் காண இங்கு கிளிக் செய்யவும்

பிப்ரவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!