நடப்பு நிகழ்வுகள் – 29 நவம்பர் 2022

0
நடப்பு நிகழ்வுகள் - 29 நவம்பர் 2022
நடப்பு நிகழ்வுகள் - 29 நவம்பர் 2022

நடப்பு நிகழ்வுகள் – 29 நவம்பர் 2022

தேசிய செய்திகள்

சர்வதேச விமானக் கண்காட்சி 2023(ஏரோ இந்தியா 2023)

  • ராணுவ துறை சார்பில், பெங்களூரு எலஹங்காவில் உள்ள விமான படை தளத்தில், 1996 முதல் சர்வதேச விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கண்காட்சி 14வது சர்வதேச விமான கண்காட்சி(ஏரோ இந்தியா 2023), 2023 பிப்ரவரி 13ம் தேதி துவங்கி, 17ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ளது,’ மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமானங்கள், ஹெலிகாப்டர்கள், விமான தயாரிப்பு உபகரணங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படும் என ராணுவ துறை அதிகாரபூர்வமாக அறிவித்ததுள்ளது.

4500 மெகாவாட் மொத்த மின்சாரம் கொள்முதல் திட்டம்

  • சக்தி கொள்கையின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு 4500 மெகாவாட் மொத்த மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை மின் அமைச்சகம் தொடங்கியுள்ளது,இதற்க்காக PFC கன்சல்டிங் லிமிடெட் நோடல் ஏஜென்சியாக நியமிக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் மின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மாநிலங்கள் மற்றும் உற்பத்தி ஆலைகள் அவற்றின் திறனை அதிகரிக்க உதவும், மேலும் ஏப்ரல் 2023 முதல் மின்சார விநியோகம் தொடங்கபடும்.

 

சர்வதேச செய்திகள்

“AUSTRA HIND 22” இருதரப்பு இராணுவப் பயிற்சி

  • இந்திய ராணுவம் மற்றும் ஆஸ்திரேலிய ராணுவம் இடையேயான “AUSTRA HIND 22” என்ற இருதரப்பு பயிற்சியின் முதல் பதிப்பு 28 நவம்பர் 2022 முதல் 11 டிசம்பர் 2022 வரை மகாஜன் ஃபீல்ட் ஃபைரிங் ரேஞ்சில் (ராஜஸ்தான்) நடைபெறுகிறது.
  • UN அமைதி அமலாக்க ஆணையின் கீழ், அரை பாலைவன நிலப்பரப்பில் பல-துறைகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, நேர்மறையான இராணுவ உறவுகளை உருவாக்குவதும், ஒன்றாக செயல்படும் திறனை மேம்படுத்துவதே இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம் ஆகும்.

ஹரிமாவு சக்தி-2022

  • இந்தியா – மலேசியா கூட்டு ராணுவப் பயிற்சியான “ஹரிமாவு சக்தி-2022” மலேசியாவின் க்லுவாங்கில் நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஹரிமவு சக்தி என்பது 2012 முதல் இந்திய மற்றும் மலேசிய ராணுவத்தினருக்கு இடையே ஆண்டுதோறும் நடத்தப்படும் பயிற்சியாகும்.
  • இந்தப் பயிற்சியின் நோக்கம், வனப்பகுதிகளில் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்தும் முறையை மேம்படுத்துவதற்கான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றன.

நா தலைமையகத்தில் மகாத்மா  காந்தி சிலை திறப்பு

  • ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமை பொறுப்பை இந்தியா 2022 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் பொறுப்பேற்கிறது. இதனையடுத்து தேசத்தந்தை மகாத்மா காந்தியின்  சிலை ஒன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்துள்ளது. இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்பட்டு 14 ஆம் திகதி இந்த சிலை திறக்கப்படவுள்ளது.
  • புகழ்பெற்ற சிற்பியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ராம் சுதர் மகாத்மாவின் சிலையை வடிவமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மாநில செய்திகள்

தமிழகத்தில் வானவில் மன்றம் திட்டம் தொடங்கப்பட்டது

  • தமிழகத்தில் 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் வகையில் “வானவில் மன்றம்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் உள்ள ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்தின் மூலம் 100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களைக் அறிமுக படுத்தினார்,மேலும் 25 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு நிரந்தர தடை சட்டம் மசோதா-தமிழ்நாடு

  • ‘தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022’-நிரந்தர தடை சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்து, நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்காக அக்டோபர் மாதம் 28-ந்தேதி தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான நிரந்தர தடைச்சட்ட மசோதாவுக்கு கவர்னரின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை.
  • பின்னர் அரசியல் சாசன சட்டம் பிரிவு 213 (2) (ஏ)யின் அடிப்படையில் சட்டசபை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் தானாகவே காலாவதி ஆகி விடும். எனவே ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் நவம்பர் 27,2022-ம் தேதிக்கு பின் பயனற்று போனது.

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை திறப்பு

  • மெரினாவில் சிங்கார சென்னை0 திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
  • சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் கொண்டது.

 

நியமனங்கள்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தேர்வு 

  • இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் வருகிற டிசம்பர் 10-ந்தேதி நடக்க இருக்கிறது, இத்தேர்தலில் தங்க மங்கை பி.டி.உஷா தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார்.
  • தலைவர் பதவிக்கு யாரும் போட்டியாடாத நிலையில் தலைவர் பதவிக்கு பி.டி. உஷா போட்டியின்றி தேர்வாகியுள்ளார் என மத்திய சட்ட மற்றும் நீதி துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.மேலும் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் தலைவராவார் ஆவர்.

இலங்கை பனை அபி விருத்தி சபையின் இந்தியாவிற்கான பிராண்ட்  அம்பாசிடர் நியமனம்

  • டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தில் – இலங்கை தோட்ட கலை அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்ற ” பனை அபிவிருத்தி சபை” யின் பிராண்ட் அம்பாசிடர் ஆக மதுரை விநாயக முருகேசன் நியமிக்கப்ட்டுள்ளார்.

 

தொல்லியல் ஆய்வுகள்

சுடுமண்ணால் ஆன விநாயகர் சிலை கண்டுபிடிப்பு

  • கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வில் சுடுமண்ணலான விநாயகர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
  • மேலும் இந்த விநாயகர் சிலை 15 சென்டிமீட்டர் உயரமும், 7 சென்டிமீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது,இந்த சிலை சோழர்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

 

விருதுகள்

சில்ப் குரு மற்றும் தேசிய விருதுகள் மாஸ்டர் கைவினைஞர்களுக்கு வழங்கப்பட்டது

  • மேம்பாடு ஆணையர் அலுவலகம் (கைவினைப் பொருட்கள்) 1965 ஆம் ஆண்டு முதல் தலைசிறந்த கைவினைஞர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது மற்றும் 2002 ஆம் ஆண்டு முதல் ஷில்ப் குரு விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விருதுகளின் முக்கிய நோக்கம், இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் ஜவுளித் துறைக்கு அவர்களின் சிறந்த கைவினைத்திறன் மற்றும் மதிப்புமிக்க பங்களிப்பிற்கான அங்கீகாரம் ஆகும்.
  • நவம்பர் 28, 2022 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான 30 சில்ப் குரு விருதுகள் மற்றும் 78 தேசிய விருதுகள் மாஸ்டர் கைவினைஞர்களுக்கு வழங்கப்பட்டது, அவர்களில் 36 பெண்கள், இந்த விருதில் தங்க நாணயம், ரூ.2.00 லட்சம் பரிசு பணம், ஒரு தாம்ரபத்ரா, ஒரு சால்வை மற்றும் சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

சர்வதேச வர்த்தக கண்காட்சி விருது 2022

  • 27 நவம்பர் 2022 அன்று பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 41வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2022 இல், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின், “பொது தொடர்பு மற்றும் வெளிப்பாட்டை நோக்கிய சிறந்த பங்களிப்பிற்காக” விருதை பெற்றுள்ளது.
  • காற்று மாசுபாடு மற்றும் ஆரோக்கியத்தில் அதன் தாக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுதல் போன்ற பிரச்சனைகளில் தங்கள் முன்னோக்குகளைப் பகிர்ந்து கொண்ட வல்லுநர்கள், புகழ்பெற்ற மருத்துவர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களுடன் “ஸ்பாட்லைட் உரையாடல்”(Spotlight Conversation) போன்றவற்றிக்காக இவ்விருது வழங்கப்பட்டது.

 

விளையாட்டு செய்திகள்

IBA யூத் ஆடவர் மற்றும் பெண்களுக்கான குத்து சண்டை  சாம்பியன்ஷிப் போட்டி

  • ஸ்பெயினின் லா நுசியாவில் சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு சார்பாக, யூத் உலக சாம்பியன்ஷிப் தொடர் கடந்த நவம்பர் 14ம் தேதி முதல் நடைபெற்றது. இதில், ஆண்களுக்கான 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சென்னையை சேர்ந்த விஸ்வநாத் சுரேஷ்  தங்கப் பதக்கம்  பெற்றார்,
  • பின்னர் பெண்களுக்கான 52 கிலோ எடை பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தேவிகா தங்கப் பதக்கத்தை வென்றார். இந்த பிரிவில் வன்ஷாஜ்வும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார்.
  • இந்த தொடரின், பெண்களுக்கான 48 கிலோ பிரிவில், பவுனா ஷர்மா வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும், ஆண்களுக்கான 54 கிலோ எடை பிரிவில் ஆஷிஷ் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.பதக்க பட்டியலில் இந்தியா 11 பதக்கங்களுடன் முதலிடத்திலும், உஸ்பெகிஸ்தான் 10, அயர்லாந்து மற்றும் கஜகஸ்தான் தலா 7 பதக்கங்களை வென்று அடுத்த இடங்களில் உள்ளனர்.

ஆசிய ஜூனியர் செஸ்

  • ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்சில் நடந்தது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் தோல்வியை சந்திக்காத தமிழக வீரர் ஹர்ஷவர்தன் 7 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
  • இந்த தொடரில் தங்கப் பதக்கத்தை வெல்ல 11 ஆசிய நாடுகளில் இருந்து 52 இளம் வீரர்கள் பங்கேற்றனர்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2022

  • 2022 ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பை போட்டி செப்டம்பர் 13 முதல் 18 வரை மற்றும் 22 முதல் 27 நவம்பர் 2022 வரை நடைபெற்றது மேலும் இப்போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன.
  • இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து கனடா கோப்பையை வென்றது, இது கனடாவின் முதல் டேவிஸ் கோப்பை கோப்பையாகும்.

 

முக்கிய தினம்

பாலஸ்தீன மக்களுடனான  சர்வதேச ஒற்றுமை தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 29 அன்று, பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • பாலஸ்தீனிய மக்களின் பிரிக்க முடியாத உரிமைகள், தேசிய சுதந்திரம் மற்றும் இறையாண்மை ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!