நடப்பு நிகழ்வுகள் – 25 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 25 மே 2023
நடப்பு நிகழ்வுகள் - 25 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 25 மே 2023

தேசிய செய்திகள்

பசுமை ஹைட்ரஜன் மற்றும் பல்வேறு துறைகளை மேம்படுத்த இந்தியாஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
  • இடப்பெயர்வு, நகர்வு கூட்டாண்மை துறை மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆகியவற்றை மேம்படுத்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துர்வு ஒப்பந்தங்களில் மே 24 அன்று  கையெழுத்திட்டு கொண்டன
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உறவில் பரஸ்பர நம்பிக்கை மற்றும் கூட்டுறவை மேலும் மேம்படுத்த இந்த ஒப்பந்தமானது அடிப்படையாக அமையும் என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்

இந்தியாவின் GDP-யானது 2022 இல் 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது என உலக மூடிஸ் முதலீட்டாளர் அமைப்பு(Moody’s Global Investors Group) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  •  இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2022 இல் 3.5 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளதாகவும், மேலும் இது அடுத்த சில ஆண்டுகளில் வேகமாக வளரும் எனவும் உலக மூடிஸ் முதலீட்டாளர் அமைப்பானது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  • உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளின் தேவை, ஆண்டுதோறும் 3-12 சதவிகிதம் வளரும் எனவும், அதே சமயத்தில்இந்தியாவின் திறன் 2030 ஆம் ஆண்டளவில் சீனாவிற்கு அடுத்தப்படியாக இருக்கும்எனவும் இந்த நிறுவனம் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

நகர்ப்புற காலநிலை திரைப்பட விழா-2023
  • நகர்ப்புற குடியிருப்புகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில், திரைப்பட ஊடகத்தைப் பயன்படுத்தி முதன்முதலாக நகர்ப்புற காலநிலை திரைப்பட விழா 2023 ஆனது ஜூன் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நியூ டவுன் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
  • இது 12 நாடுகளைச் சேர்ந்த 16 திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் காலநிலைதாழ்த்தக்கூடிய நகரங்களை உருவாக்குவது பற்றிய உரையாடல்களைத் தூண்டுவதற்காகவும், U20 முன்னுரிமைக்கு ஏற்ப குடிமக்கள்சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான நடத்தையைமேற்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறந்த 500 சூப்பர் கம்ப்யூட்டிங் பட்டியலில் இந்தியாவின் ‘AIRAWAT’ 75வது இடத்தை பிடித்துள்ளது
  • புனேயில் உள்ள C-DAC இல் நிறுவப்பட்ட AI சூப்பர் கம்ப்யூட்டர் ‘AIRAWAT’ உலக அளவில் 75வது இடத்தைப் பிடித்துள்ளது. ஜெர்மனியில் நடந்த சர்வதேச சூப்பர் கம்ப்யூட்டிங் மாநாட்டில் (ISC 2023) முதல் 500 உலகளாவிய சூப்பர் கம்ப்யூட்டிங் பட்டியலில் 61வது பதிப்பில் இது அறிவிக்கப்பட்டது. இது உலகளவில் AI சூப்பர் கம்ப்யூட்டிங் நாடுகளில் இந்தியாவை முதலிடத்தில் வைக்கிறது
  • இயற்கை மொழி செயலாக்கம், பட ஊர்வலம், முறை அங்கீகாரம், விவசாயம், மருத்துவ இமேஜிங், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, ஆடியோ உதவி, ரோபாட்டிக்ஸ் மற்றும் மூலோபாயத் துறைகளுக்கான தீர்வுகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பயன்பாட்டு AI இல் இந்தியா பணியாற்றி வருகிறது.

நியமனங்கள்

சென்னை உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட 4 நீதிபதிகள் பதவியேற்பு
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய கூடுதல் நீதிபதிகளாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றிய ஆர்.சக்திவேல், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.தனபால், சென்னை பெருநகர தொழிலாளர் நல நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதியாக பணியாற்றிய சி.குமரப்பன், கோவை மாவட்டமுதன்மை நீதிபதியாக பணியாற்றிய கே.ராஜசேகர் ஆகிய 4 பேரை நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.
  • அதன்படி உயர் நீதிமன்ற கலையரங்கில் புதிய நீதிபதிகளின் பதவியேற்பு நிகழ்ச்சியானது நடைபெற்றது. புதிய நீதிபதிகளுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
காங்கிரஸின் யு.டி.காதர் கர்நாடக சட்டசபையின்  சபாநாயகராக பதவியேற்பு 
  • கர்நாடக முன்னாள் அமைச்சரும், ஐந்து முறை எம்எல்ஏவாகவும் இருந்த யுடி காதர் ஒருமனதாக சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • காதர் கர்நாடக சட்டசபையின் சபாநாயகராக பணியாற்றும் முதல் முஸ்லிம் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது

டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவராக முகுந்தன் மீண்டும் நியமனம்.
  • நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், முகுந்தனை மீண்டும் ஐந்து வருட காலத்திற்கு தலைவர் & நிர்வாக அதிகாரியாக (CMD) டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் நியமித்துள்ளது.
  • முகுந்தனின் தற்போதைய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்காலம் நவம்பர் 25, 2023 அன்று முடிவடைகிறது, இந்த நியமனத்துடன் அவரது தற்போதைய பதவிக்காலம் மேலும் 5 ஆண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

திரிபுராவின் சுற்றுலாத்துறை தூதராகசவுரவ் கங்குலிநியமனம்.
  • முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி திரிபுரா சுற்றுலாத்துறையின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக திரிபுர முதல்வர் மாணிக் சாஹா மே 23 அன்று அறிவித்துள்ளார்.
  • திரிபுரா சுற்றுலாத் துறைக்கான தூதராக கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, மாநிலத்தின் ஆராயப்படாத மற்றும் இந்திய மக்களுக்கு அறியப்படாத சுற்றுலாத் தலங்களுக்கு குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய டேக்வாண்டோ அமைப்பின் தலைவராக ஷிர்கோங்கர் நியமனம்.
  • இந்திய டேக்வாண்டோ நிர்வாகக் அமைப்பின் தலைவராக நாம்தேவ் ஷிர்கோன்கர் 21 மே, 2023 அன்று நடத்தப்பட்ட நிர்வாக உறுப்பினர்களின் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • டேக்வாண்டோவில் கருப்பு பட்டை(Black Belt) பெற்றுள்ள இவர், இந்திய டேக்வாண்டோ அமைப்பின் தலைவராக பணியாற்றி பல சீர்திருத்தங்களை மேற்கொள்வார் என டேக்வாண்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. டேக்வாண்டோகால்களையும் கைகளையும் பயன்படுத்தி எதிராளியை விரட்டும் ஒரு சுதந்திரமான போர் விளையாட்டாகும்.

தொல்லியல் ஆய்வுகள்

கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் வாய்க்கால் அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது
  • அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகேயுள்ள மாளிகைபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் 3 ஆம் கட்ட அகழாய்வுப் பணியில், செங்கற்கல்லால் ஆன வாய்க்கால் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வாய்க்கால் போன்ற அமைப்பு கிழக்கு மேற்காக 315 செ.மீ நீளமும், 45 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

கரிம நானோகுழாய்களைப் பயன்படுத்தி புதிய செயற்கை ஒளிஅறுவடை அமைப்பு
  • சூரிய மின்கலங்கள், ஒளிச்சேர்க்கை, ஆப்டிகல் சென்சார்கள் மற்றும் டியூன் செய்யக்கூடிய பல வண்ண ஒளிஉமிழும் பொருட்கள் ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடிய கரிம நானோகுழாய்களைப் பயன்படுத்தி செயற்கை ஒளியை அறுவடை செய்வதற்கான புதிய முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • கொல்கத்தா IISER நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர். சுப்ரதிம் பானர்ஜி,   S. N. போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையத்தை சேர்ந்த டாக்டர் சுமன் சக்ரபர்த்தியும் இணைந்து இந்த கரிம நானோகுழாய்களில் செயற்கை ஒளி அறுவடை பற்றிய சோதனை மற்றும் கணக்கீட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.

விளையாட்டு செய்திகள்

ISSF உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு 2 பதக்கங்கள்.
  • மே 23 அன்று நடைபெற்ற 2023 ISSF உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை  தர்ஷ்னா ரத்தோர் மற்றும் கனேமட் செகோன் பெண்கள் தனிநபர் போட்டியில்  வெண்கல மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • இந்த ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை மகளிருக்கான பிரிவில் இந்தியா இரண்டு தனிநபர் பதக்கங்களை வென்றுள்ளது என்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

முக்கிய தினம்

உலக தைராய்டு தினம்
  • தைராய்டு நோயின் தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக தைராய்டு தினம் மே 25அன்று அனுசரிக்கப்படுகிறது.
      1.  இந்த ஆண்டிற்கான உலக தைராய்டு தினத்தின் கருப்பொருள்“Measure your blood pressure accurately,control it,live longer’, to combat the low awareness rates world wide’.
        Download PDF

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here
    Captcha verification failed!
    CAPTCHA user score failed. Please contact us!