நடப்பு நிகழ்வுகள் – 18 ஏப்ரல் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 18 ஏப்ரல் 2023
நடப்பு நிகழ்வுகள் - 18 ஏப்ரல் 2023

நடப்பு நிகழ்வுகள் – 18 ஏப்ரல் 2023

தேசிய செய்திகள்

மத்திய எஃகு அமைச்சர் ஸ்ரீ ஜோதிராதித்ய எம்.சிந்தியா மும்பையில் இந்தியா ஸ்டீல் 2023 ஐத் தொடங்கி வைத்தார்.
  • மத்திய எஃகு அமைச்சகம், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் மற்றும் தொழில்துறை சேம்பர் FICCI ஆகியவற்றுடன் இணைந்து எஃகுத் தொழில் குறித்த இந்தியா ஸ்டீல் -2023 மாநாடு மற்றும் சர்வதேச கண்காட்சியை மும்பையில் உள்ள  கோரேகான் கண்காட்சி மையத்தில் ஏப்ரல் 19 முதல் 21 வரை  நடத்துகிறது.
  • இந்த நிகழ்வு எஃகு தொழில்துறையின் சமீபத்திய முன்னேற்றங்கள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி விவாதித்து தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மூன்று நாள் G20 MACS கூட்டம் வாரணாசியில் தொடங்க உள்ளது 
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் 2023 ஏப்ரல் 17-19 தேதிகளில் வேளாண் முதன்மை விஞ்ஞானிகளின் (MACS) G20 கூட்டம் வாரணாசியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. G20 உறுப்பு நாடுகளிலிருந்து 80 வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளன.
  • உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து, காலநிலை ,ஸ்மார்ட் வேளாண்மை, டிஜிட்டல் வேளாண்மை, பொது தனியார் கூட்டாண்மை உள்ளிட்ட வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் பல்வேறு சிக்கல்களை விவாதிக்கவும்,”தினை மற்றும் பிற பழங்கால தானியங்கள் சர்வதேச ஆராய்ச்சியை பற்றி விவாதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

மெல்போர்ன் 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமாக மாறிய உள்ளது
  • மக்கள்தொகை அடிப்படையில் மெல்போர்ன் 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமாக சிட்னியை விட முன்னேறியுள்ளது
  • மெல்போர்னின் எல்லையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மெல்டனின் பகுதியை உள்ளடக்கிய நகரத்தின் மக்கள் தொகை 4,875,400 – சிட்னியை விட 18,700 அதிகமாக உள்ளது.மெல்போர்ன் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமாக இருந்தது.

மாநில செய்திகள்

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயருகிறது
  • தமிழக சட்டப்பேரவையில் பத்திரப்பதிவுக்கான முத்திரை தாள் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தில் 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1000 ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்படுகிறது
  • இதே போல்  நிறுவனங்களுக்கான சங்க விதிகளுக்கான முத்திரைதாள் கட்டணம் ஐந்து லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான முத்திரைத் தாள் கட்டணம் 500 ரூபாயகாக மாற்றியமைக்கப்பட்டு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார செய்திகள்

இந்தியாவின் மொத்த விலைக் குறியீடு(WPI) பணவீக்கம் 1.34% ஆக குறைவு
  • இந்தியாவின் மொத்த விலைக் குறியீடு (WPI) அடிப்படையிலான பணவீக்கம் மார்ச் 2023 இல் 29 மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.34% ஆகக் குறைந்துள்ளது.
  • உணவுப் பொருட்கள், ஜவுளிகள், உணவு அல்லாத பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்றவற்றின் விலைகள் வீழ்ச்சியடைவதே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம் என்று அரசாங்கம் கூறியது. மொத்த விலை பணவீக்கம் பிப்ரவரியில் 3.85% ஆகவும், 2023 ஜனவரியில் 4.80% ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நியமனம்

நேபாள வெளியுறவு அமைச்சராக நாராயணன் பிரசாத் பதவியேற்பு 
  • அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேபாளத்தின் புதிய வெளியுறவு அமைச்சராக நேபாளி காங்கிரஸ் மூத்த தலைவர் நாராயண் பிரசாத்  பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் ராம் சந்திர பௌடேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • நேபாளத்தில் பிரசண்டா தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற ஆளும் கூட்டணிக் கூட்டத்தில், வெளியுறவு அமைச்சராக நாராயண் பிரசாத்தை நியமிக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.மேலும் இவர் நேபாளி காங்கிரஸின் மத்தியக் குழு உறுப்பினராக உள்ளார். இதற்கு முன்னர் கல்வி, விளையாட்டுத் துறை இணையமைச்சராகவும், நீர்ப்பாசனத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

விருதுகள்

நந்தினி குப்தாமிஸ் இந்தியா 2023′ பட்டத்தை வென்றார்
  • ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான நந்தினி குப்தாமிஸ் இந்தியா 2023′ பட்டத்தை வென்றுள்ளார். இதில், டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா இரண்டாம் இடத்தையும், மணிப்பூரைச் சேர்ந்த தோனோஜாம் ஸ்ட்ரெலா லுவாங் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
  • மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் நந்தினி குப்தா கலந்து கொள்ள உள்ளார்.

ஃபெடக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜ் சுப்ரமணியத்துக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங்  ஃபெடக்ஸ் போக்குவரத்து நிறுவன தலைவர் ராஜ் சுப்பிரமணியத்துக்கு சிறந்த குடிமகனுக்கானபிரவாசி பாரதிய சம்மான்விருதை வழங்கினார்ஃபெடக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜ் சுப்பிரமணியத்தின் சர்வதேச நிறுவனங்களில் தலைவராக பணியாற்றிய அனுபவம் மற்றும் வணிக நுண்ணறிவு காரணமாக ஃபெடக்ஸ் நிறுவனம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது
  • அமெரிக்கவாழ் இந்தியரான இவருக்கு  இந்த ஆண்டுக்கான இந்திய வம்சாவளி மற்றும் புலம்பெயர் இந்தியர்களுக்கு இந்தியா வழங்கும் உயரிய விருதான பிரவாசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டது.

சிறைத்துறை அதிகாரிகளுக்கான சிறந்த பயிற்சி கையேடுகள் தயாரித்த மதுரை சிறை உளவியல் நிபுணருக்கு தேசிய விருது 
  • மதுரை சிறை உளவியல் நிபுணருக்கு சிறைத்துறை அதிகாரிகளுக்கான பயிற்சிக்காக சிறந்த கையேடுகளை தயாரித்த கொடுத்ததிற்காக விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் நல அலுவலர் அடிப்படை பயிற்சி, சிறை மருத்துவர் அடிப்படை பயிற்சி, சிறை மருத்துவர் இடைநிலை பயிற்சி, சிறைத்துறை சீர்திருத்த நிகழ்ச்சி, சிறை காவலர்களின் மன அழுத்த குறைப்பு பயிற்சி போன்ற 5 கையேடுகளை தயாரித்தார்
  • இந்நிலையில் டெல்லியில் நடந்த சிறப்பு நிகழ்வில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்ற நிலையில், தமிழ்நாடு சார்பில், மதுரை மத்திய சிறை உளவியல் நிபுணர் ஜெயந்தியும் பங்கேற்று பதக்கம், விருது பெற்றார்.

விளையாட்டு செய்திகள்

2023 மலேசிய சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்காக 5 தங்கப் பதக்கங்களை வேதாந்த் வென்றார்.
  • மலேசியாவின் கோலாலம்பூரில் நீச்சல் போட்டியில் வேதாந்த் 5 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.மேலும் அவர் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார்.
  • இந்த போட்டியில் பங்கேற்ற வேதாந்த் 50மீ, 100மீ, 200மீ, 400மீ மற்றும் 1500மீ ஆகிய 5 பிரிவுகளில் பங்கேற்று 5 பிரிவுகளிலும் வெற்றி பெற்று 5 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

முக்கிய தினம்

உலக பாரம்பரிய தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 அன்று, மக்கள் உலக பாரம்பரிய தினத்தை கொண்டாடுகிறார்கள்,முதல் உலக பாரம்பரிய தினம் 1983 இல் கொண்டாடப்பட்டது, அதன் பின்னர், கலாச்சார பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான நிகழ்வாக இது மாறியுள்ளது.
  • இந்த ஆண்டுக்கான  உலக பாரம்பரிய தினத்தின் கருப்பொருள்  “மரபு மாற்றங்கள்(Heritage Changes)”.

Download PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!