CSK ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பிளேஆப்களுக்கு தகுதி பெற இன்னும் ஒரு வாய்ப்பு?

0
CSK ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பிளேஆப்களுக்கு தகுதி பெற இன்னும் ஒரு வாய்ப்பு?
CSK ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பிளேஆப்களுக்கு தகுதி பெற இன்னும் ஒரு வாய்ப்பு?
CSK ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பிளேஆப்களுக்கு தகுதி பெற இன்னும் ஒரு வாய்ப்பு?

நடப்பு IPL தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி கிட்டத்தட்ட வெளியேறி இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆப்களுக்கு தகுதி பெற ஒரேயொரு முக்கியமான வாய்ப்பு இருக்கிறது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக்கில் இதுவரை ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 2022 பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது. இந்த ஆண்டிற்கான IPL தொடரில் இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறமுடியாமல் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை வகிக்கிறது. இந்த தொடர் தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இருப்பினும் பிளேஆஃப்களுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை பெற விரும்பினால், MI அணி இப்போது மீதமுள்ள ஆறு போட்டிகளையும் பெரிய வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.

ஏப்ரல் 30ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!

அவர்கள் -1ன் NRR ஐ கொண்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. இப்போது புள்ளிப் பட்டியலில் இருக்கும் முதல் 5 அணிகள் 14 புள்ளிகளை எட்டினால், MI அணி தகுதி பெறுவது சாத்தியமற்றதாகிவிடும். அந்த வகையில் MI அணி மீதமுள்ள போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போது IPL சாம்பியன்களான MI அணியின் நிலைமை இப்படி இருக்கிறது என்றால் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸும் கிட்டத்தட்ட அதே சூழலில் தான் இருக்கிறது.

Exams Daily Mobile App Download

கடந்த 8 போட்டிகளில் 2ல் மட்டும் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது CSK அணி. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியை போலவே, சிஎஸ்கேயும் மீதமுள்ள ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். இந்த ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெறுவதன் மூலம் CSK அணி பிளேஆப்களுக்கு தகுதி பெற முடியும். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதமுள்ள போட்டிகளில் SRH, RCB, DC, MI, GT மற்றும் RR அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆப்களுக்கு தகுதி பெறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!