CSIR – NEERI தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி வாய்ப்பு – ரூ.25,000 மாத ஊதியம்..!
தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR NEERI) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Associate- I பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Environmental Engineering Research Institute (CSIR NEERI) |
பணியின் பெயர் | Project Associate- I |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
CSIR NEERI காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், Project Associate- I பதவிக்கு என்று மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
CSIR NEERI கல்வி தகுதி:
Project Associate- I பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Biotech / Microbiology / Life Science பாடப்பிரிவில் M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
Best TNPSC Coaching Center – Join Now
CSIR NEERI வயது வரம்பு:
Project Associate- I பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 35 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
CSIR NEERI ஊதிய தொகை:
Project Associate- I பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நபர்கள் பணியின் போது ரூ.25,000/- மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் இத்துடன் பணியாளர்கள் கூடுதல் தொகையாக HRA வழங்கப்படும்.
CSIR NEERI தேர்வு முறை:
Project Associate- I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்களுக்கு தேர்வு குழு பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் நேரடியாக ஆன்லைன் நேர்காணல் நடைபெறும். இதன் மூலம் இப்பணிக்கு தேவையான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
CSIR NEERI விண்ணப்பிக்கும் முறை:
Project Associate- I பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.