தமிழகத்தில் MBBS, BDS மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு – இன்று (ஜன.27) முதல் தொடக்கம்!

0
தமிழகத்தில் MBBS, BDS மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு - இன்று (ஜன.27) முதல் தொடக்கம்!
தமிழகத்தில் MBBS, BDS மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு - இன்று (ஜன.27) முதல் தொடக்கம்!
தமிழகத்தில் MBBS, BDS மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு – இன்று (ஜன.27) முதல் தொடக்கம்!

தமிழ்நாட்டில் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 1,930 பி.டி.எஸ். மருத்துவ படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வு இன்று (ஜன.27) ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கியுள்ளது.

கலந்தாய்வு:

இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு 2021 ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் என்டிஏயின் இணையதளத்தில் கடந்த 2021 நவம்பர் மாதம் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி தமிழகத்தில் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 1,930 பி.டி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியலில் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த மாணவர் ஐ. சிவா என்பவர் 514 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்.

IND vs WI: இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்கும் ரோஹித் சர்மா – ரசிகர்கள் உற்சாகம்!

மேலும் முதல் 10 இடங்களில் 7 மாணவர்களும், 3 மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு தொடங்கும் வரை காத்திருக்க தேவையில்லை மாநில அரசுகளை கலந்தாய்வை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.இதையடுத்து தமிழகத்தில் ஜன.27ம் தேதி அன்று மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும் இரு மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார். அதன் படி இன்று சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 1,930 பி.டி.எஸ் இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

சென்னை: நகை வாங்க இதுதான் சரியான நேரம் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!

கலந்தாய்வின் முதல் நாளான இன்று மு சிறப்புப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. 7.5% இட ஒதுக்கீடு பெறும் மாணவர்கள், சிறப்பு பிரிவினர் கலந்தாய்வு நாளை தொடங்கவுள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 30.01.2022 முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!