இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – 8 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி!

0
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் - 8 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் - 8 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – 8 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி!

இந்தியாவில் தற்போது பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவலின் தாக்கம் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அத்துடன் டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது இன்றைய கொரோனா பாதிப்பு பற்றிய நிலவரத்தை பார்ப்போம்.

கொரோனா பரவல்

இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் இந்தியாவில் 4ம் அலையின் தாக்கம் ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

மேலும் இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா பாதிப்பு 2,922 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவிலும் கொரோனாவால் 15000க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

TCS, Infosys, HCL ஊழியர்களுக்கு ஷாக் – முடிவுக்கு வரும் WFH? நிறுவனங்களின் திட்டம் இதுதான்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,32,22,017 ஆக பதிவாகியுள்ளது. மேலும் தினசரி பாதிப்பு 8,329 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 200 பேருக்கு கூடுதலாக உறுதி செய்யப்பட்டு 8,582 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தால் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு அமல்படுத்தும் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here