திருப்பதி தேவஸ்தானத்திடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன் – வைரலாகும் வீடியோ!
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இருவருமே திருப்பதியில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தனர். இந்த கோவிலுக்கு இருவரும் செருப்பு அணிந்து சென்றதால் கோவில் நிர்வாகத்திற்கு விக்னேஷ் சிவன் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன்
நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலமாக பார்த்து பேசி பழகி ஏழு ஆண்டுகள் காதலித்த பின்னர் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் திருப்பதியில் வைத்து திருமணத்தை நடத்தலாம் என பிளான் செய்திருந்தனர். பின்னர் சில குழப்பங்களுக்கு பிறகு மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக திருமணத்தை நடத்தினர்.
TN Job “FB
Group” Join Now
பாலிவுட் நடிகர்களில் இருந்து திரையுலக பிரபலங்கள் பலரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதாவது திருமணத்தை யாருமே மொபைல் போனில் படம் எடுக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்தை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் படமாக இயக்க உள்ளார். மேலும், இந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 25 கோடிக்கு வாங்கியுள்ளது.
இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – 8 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி!
திருமணம் முடிந்த கையோடு இருவரும் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். கோவிலில் உள்ள இருந்து பக்தர்கள் அனைவரும் இருவருக்கும் திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோவில் வளாகத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் போட்டோ ஷூட் நடத்தினர். போட்டோசூட்டின் போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருமே காலில் செருப்பு அணிந்து இருந்தனர். கோவில் வளாகத்திற்குள் செருப்பணிந்து சென்றதால் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், விக்னேஷ் சிவன் பதட்டத்தில் இருவரும் காலில் செருப்பு அணிந்து வந்ததை கவனிக்கவில்லை எனவும் கோவில் நிர்வாகத்திற்கு மன்னிப்புக் கேட்டும் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.