40 கோடி இந்தியர்கள் வறுமைக்கு செல்லக்கூடும் – தொழிலாளர் அமைப்பு அதிர்ச்சி தகவல்..!

0
40 கோடி இந்தியர்கள் வறுமைக்கு செல்லக்கூடும்
40 கோடி இந்தியர்கள் வறுமைக்கு செல்லக்கூடும்

40 கோடி இந்தியர்கள் வறுமைக்கு செல்லக்கூடும் – தொழிலாளர் அமைப்பு அதிர்ச்சி தகவல்..!

கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும் அச்சத்தை காட்டி வருகிறது. இந்நிலையில் வளர்ந்த நாடுகளே கொரோனாவினால் கடும் பாதிப்படைந்து வரும் நிலையில் இந்தியா என்ன செய்யப்போகிறதோ தெரியவில்லை. உலகம் பொருளாதாரம் எந்த அளவுக்கு பேரழிவினை எதிர்கொள்ள போகிறதோ.

இந்தியா வறுமைக்கு செல்லக்கூடும்..!

கொரோனா வைரஸால் 81% தொழிலாளர்கள் பாதிக்கப்படலாம் என தெரிகிறது. இரண்டாவது உலகப் போரிலிருந்து ஒப்பிடும்போது இது மோசமான நிலையை சந்தித்துள்ளது. இந்தியாவில் வேலையின்மையால் 400 மில்லியன் மக்கள் வறுமைக்கு செல்லக்கூடும் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி முக்கிய தேர்வுகள் நடைபெறுவது எப்போது?

இப்போதைக்கு மீண்டு வர வாய்ப்பில்லை..!

ஜூலை – டிசம்பர் காலத்தில் உலகளவில் 6.7% பணி நேரங்கள் உலகளவில் அழிக்கப்படலாம். இது கடந்த 2008 – 09 ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்பினை விட அதிகம். கொரோனாவினால் 2020ம் ஆண்டின் பிற்பாதியில் நிலைமை சீரடைய வாய்ப்பில்லை என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் பாதிப்பு..!

கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதை அடுத்து தற்போது கிட்டத்தட்ட 2.7 பில்லியன் தொழிலாளர்களை பாதித்துள்ளது. இது உலக தொழிலாளர்களின் 81% குறிக்கிறது என்றும் ஐஎல்ஓ தெரிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு 195 மில்லியன் முழு நேர தொழிலாளர்கள் தங்களது வேலையினை இழக்கலாம் என்றும் கணித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளை மே 15 வரை திறக்க வேண்டாம் – மத்திய அமைச்சரவைக்குழு பரிந்துரை..!

இந்தியாவுக்கு பாதிப்பு அதிகம்..!

இந்தியாவில் முறைசாரா பொருளாதாரத்தில் கிட்டதட்ட 90% மக்கள் உள்ளனர். சுமார் 400 மில்லியன் தொழிலாளர்களின் நெருக்கடியின் போது வறுமை நிலைக்கு செல்லக்கூடும்.

ஏப்ரல் 5ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வேலையின்மை விகிதம் 23.4% என்று CMIE தெரிவித்திருந்தது. இதில் நகர்புற வேலையின்மை விகிதம் 30.9% ஆகவும், இதே கிராமப்புற வேலையின்மை விகிதம் 20% ஆகவும் கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிகவும் கடுமையான நெருக்கடியை தொழிலாளர்கள் எதிர்கொண்டு வருவதாக உலகளாவிய அமைப்பு தெரிவித்துள்ளது.

INO-4800 கொரோனா தடுப்பூசி சோதனை.!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!