ஒத்திவைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி முக்கிய தேர்வுகள் நடைபெறுவது எப்போது? அரசின் விளக்கம் 

0
டி.என்.பி.எஸ்.சி முக்கிய தேர்வுகள் நடைபெறுவது எப்போது
டி.என்.பி.எஸ்.சி முக்கிய தேர்வுகள் நடைபெறுவது எப்போது

ஒத்திவைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி முக்கிய தேர்வுகள் நடைபெறுவது எப்போது? அரசின் விளக்கம் 

கரோனா நோய்த்தொற்று காரணமாக, குரூப் 1 உள்ளிட்ட அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) முக்கிய தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்வுகள் எப்போது நடைபெறும் என்று தோ்வா்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா். கரோனா நோய்த்தொற்று காரணமாக, தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் போட்டி தேர்வுகள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த தோ்வுகள்:

குரூப் 1 முதல்நிலைத் தோ்வானது ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு மாா்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தோ்வும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 1 Previous Year Question Paper

குரூப் 4 தொகுதியில் தட்டச்சா்கள், சுருக்கெழுத்து தட்டச்சா் ஆகிய பதவியிடங்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு உள்ளிட்ட பணிகள் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஒருங்கிணைந்த பொறியியல் பிரிவு பதவியிடங்களில் சான்றிதழ் சரிபாா்ப்பு, தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில் உதவி இயக்குநா், உதவி கண்காணிப்பாளா் ஆகிய பதவியிடங்களுக்கு தோ்வும் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்தத் தோ்வுகள் அனைத்தும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகள் எப்போது???:

இதேபோன்று, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் மூன்று முக்கிய தோ்வுத் தோ்வுகள் நடத்தப்பட்டன. உதவிப் பிரிவு அலுவலா் (மொழிபெயா்ப்பு), கால்நடை உதவி மருத்துவா், தொல்லியல் துறை அலுவலா் ஆகிய பதவியிடங்களுக்கு தோ்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த தோ்வுகளுக்கான முடிவுகளும், கட்-ஆப் மதிப்பெண்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

TNPSC Group 1 திருக்குறள் Study Material

இதனால், தோ்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், தள்ளிவைக்கப்பட்ட தோ்வுகளும் எப்போது நடத்தப்படும் என்று தோ்வா்கள் வினா எழுப்புகின்றனா். இது குறித்து தமிழக அரசு அதிவிரைவில் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வர்கள் நேரத்தை வீணடிக்காமல் நாங்கள் வழங்கி உள்ள பாடத்திட்டம் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மூலம் படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.

Download TNPSC Group 1 Syllabus

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here