ஜூலை 4 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அதிகரிக்கும் கொரோனா தொற்று! அரசு முடிவு!

0
ஜூலை 4 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - அதிகரிக்கும் கொரோனா தொற்று! அரசு முடிவு!
ஜூலை 4 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - அதிகரிக்கும் கொரோனா தொற்று! அரசு முடிவு!
ஜூலை 4 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அதிகரிக்கும் கொரோனா தொற்று! அரசு முடிவு!

அதிகரித்து வரும் கொரோனா பரவல் பாதிப்புகள் மற்றும் கோடை விடுமுறைக்காக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக்கில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூலை 4ம் தேதி முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் ஜூலை 4 முதல் கோடை விடுமுறையை கடைபிடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் லடாக்கில் உள்ள பள்ளிகள் அனைத்தையும் மூடுவதற்கு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள பள்ளிகளை மூடுவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவுகள் நேற்று (ஜூலை 2) வெளியிடப்பட்டன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இரு பிரிவுகளிலும் உள்ள பள்ளிகளுக்கும் ஜூலை 4 முதல் கோடை விடுமுறை துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இப்போது ஜூலை 4 முதல் துவங்கும் கோடை விடுமுறைகள் அடுத்த 15 நாட்களுக்கு தொடரும் என்று மாவட்ட நீதிபதி ஸ்ரீகாந்த் பாலாசாஹிப் சூசே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில், ‘கொரோனா பாதிப்புகள் குறிப்பாக குழந்தைகளிடையே அதிகரித்ததை அடுத்து, நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்கும் நடவடிக்கையாக லடாக் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஜூலை 11 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

லடாக்கில் கடந்த 6 நாட்களில் 60க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் காணப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதே போல ஜம்மு காஷ்மீர் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பி.கே.சிங் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘காஷ்மீர் பிரிவு மற்றும் ஜம்மு பிரிவின் குளிர்கால மண்டலத்தில் செயல்படும் அனைத்து அரசுக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஜூலை 4 முதல் கோடைக் கால விடுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!