கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு PhD கட்டாயமில்லை – முக்கிய அறிவுறுத்தல்!

0
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு PhD கட்டாயமில்லை - முக்கிய அறிவுறுத்தல்!
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு PhD கட்டாயமில்லை - முக்கிய அறிவுறுத்தல்!
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு PhD கட்டாயமில்லை – முக்கிய அறிவுறுத்தல்!

கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய பிஎச்டி கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில் பிஎச்டி தகுதியை கட்டாயமில்லை என்றும், அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த விதியை பின்பற்ற வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

பி எச் டி விலக்கு:

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக பணிபுரிவது பலரது கனவாக இருந்து வருகிறது. இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தற்போது உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான பிஎச்டி பட்டம் கட்டாயம் என்ற சூழல் நிலவி வந்தது. சில பல்கலைக்கழகங்கள் உதவி பேராசிரியர் பதவிக்கு பிஎச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் மாற்றி அமைத்துள்ளது.

அக்.3ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை – 7 மாணவிகளுக்கு கொரோனா தொற்று!

இது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் உதவி பேராசிரியர் பதவிக்கு பிஎச்டி தேவை என்று கட்டாயப்படுத்த கூடாது எனவும் பிஎச்டி பட்டம் இல்லாதவர்களும் இனிமேல் உதவி பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த விலக்கு தற்போதைய கல்வி அமர்வுக்கு மட்டுமே என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது

Jio vs Airtel vs Vi நிறுவனங்களின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

கொரோனா தாக்கம் தீவிரமடைந்திருந்ததன் காரணமாக மக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் பல மாணவர்கள் தங்கள் பிஎச்டி ஆய்வறிக்கையை சரியான நேரத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை என்பதால் யுஜிசி (UGC) நெட் தேர்ச்சி பெற்றவர்கள் தற்போதைக்கு பிஎச்டி தேவையிலிருந்து விலக்கு கோரியிருந்தனர். தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் 6,300 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!