இந்தியாவில் சமூக பரவலாக மாறிவிட்டதா கொரோனா வைரஸ்..? மத்திய அரசு விளக்கம்..!

0
இந்தியாவில் சமூக பரவலாக மாறிவிட்டதா கொரோனா வைரஸ்
இந்தியாவில் சமூக பரவலாக மாறிவிட்டதா கொரோனா வைரஸ்

இந்தியாவில் சமூக பரவலாக மாறிவிட்டதா கொரோனா வைரஸ்..? மத்திய அரசு விளக்கம்..!

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி 1,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 227 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா பரவல் 3-வது நிலையான சமூக பரிமாற்றம் என்ற அபாய கட்டத்திற்குச் சென்று விட்டதாக பரவலாகப் பேசப்பட்டது. மத்திய அரசு இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் விடுமுறை நீட்டிப்பு !!!!

கொரோனாவின் 4 நிலைகள்

கொரோனா பரவலில் மொத்தம் நான்கு நிலைகள் உள்ளன. முதல் நிலை என்பது, பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாடுகளில் இருப்பதால் அங்கு சென்ற அல்லது அங்கு இருக்கும் இந்தியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது. இரண்டாம் நிலை என்பது உள்ளூர் பரவல்.

அதாவது வெளிநாட்டில் கொரோனாவுடன் இந்தியாவுக்கு வந்த நபர், அவர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களுக்கும் கொரோனாவை பரப்புகிறார். இது குறைந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மூன்றாவது நிலை..!

மூன்றாவது நிலை என்பது, ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்று அவருக்கே தெரியாது. இவர் வெளிநாட்டிலிருந்து வராதவராக இருப்பார். ஆனால் அவர், மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கும் கொரோனாவை பரப்பி விடுகிறார். இந்த நிலையின்போது, பாதிக்கப்பட்ட நபர்களை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. இந்த நிலைமை தான் இத்தாலி, ஸ்பெயினில் ஏற்பட்டது.

கொரோனாவை குணமாக்க புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு !!!!

இந்தியா இந்த 3 வது நிலையில் இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இவற்றை மறுத்துள்ள மத்திய அரசு இந்தியாவில் கொரோனா பரவல், சமூக பரிமாற்றத்திற்கு இன்னும் செல்லவில்லை. உள்ளூர் பரிமாற்ற அளவில்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

நான்காவது நிலை..!

நான்காவது நிலையானது மிகவும் அபாயகரமானதாகும். இந்த நிலையில், நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் கொரோனா பரவியிருக்கும். யாருக்கு எங்கிருந்து வந்தது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாத நிலை. சமூக விலகலை மக்கள் உரிய முறையில் பின்பற்றினால், கொரோனா வைரசை நாட்டை விட்டே விரட்ட முடியும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பா..? 
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!