கொரோனா அதிகமுள்ள 2 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு!
கொரோனா புதிய பாதிப்புகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வரும் மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த பொது முடக்கத்தின் போது பின்பற்ற வேண்டிய சில வழிகாட்டுதல் நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
அசாம் மாநிலத்தில் நேற்று (ஜூலை 28) ஒரு நாளில் கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை 1,436 ஆக அதிகரித்துள்ளதால், பாதிப்புகள் அதிகம் பதிவு செய்யப்பட்டு வரும் கோலகாட் மற்றும் லக்கிம்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ‘அசாம் மாநிலத்தில் கோலகாட் மற்றும் லக்கிம்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் நிறுத்தி வைப்பு – கொரோனா எதிரொலி!
இந்த பொது முடக்க காலத்தில் அனைத்து வணிக நிறுவனங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், ரிசார்ட்ஸ், வீட்டு விநியோகம் மற்றும் விற்பனை கவுண்டர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர அசாமின் கோல்பாரா, மோரிகான், ஜோர்ஹாட், சோனித்பூர் மற்றும் பிஸ்வநாத் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நேர்மறை விகிதங்கள் மிதமானவையாக இருப்பதால் இந்த மாவட்டங்களில் மதியம் 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் மதியம் 1 மணி வரை ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தவிர புதிய பாதிப்புகள் விகிதத்தில் முன்னேற்றத்தை காட்டும் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவிர,
- மளிகை சாமான்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், பால் மற்றும் பால் சாவடிகள், விலங்கு தீவன கடைகள் அனைத்தும் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.
- முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அனைத்து பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும்
- அப்பகுதிகளில் பொருட்களின் இயக்கம் தொடரும்.
TN Job “FB
Group” Join Now
- ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அனைத்து மாவட்டங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படும்.
- இங்கு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
- மற்ற மாவட்டங்களை பொருத்தளவு திருமணம் அல்லது இறுதி சடங்குகளுக்கு 10 பேர் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து மாவட்டங்களிலும் சட்டவிரோத உற்பத்தி மற்றும் நாட்டு மதுபானங்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.