பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – 41,363 பேர் விண்ணப்ப பதிவு!
தமிழகத்தில் கடந்த ஜூலை 26ம் தேதி முதல் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. இந்த 2 நாட்களில் இதுவரை 41,363 பேர் விண்ணப்பித்துள்ளனர் என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தகவல் தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மே 5ம் தேதி நடக்கவிருந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு தேர்வு நடத்துவதற்கு ஏதுவான சூழல் நிலவவில்லை. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் போன்றோர்களிடம் தொலைபேசி, மின்னஞ்சல் வாயிலாகவும் கருத்துகள் கேட்ப்பட்டு அதன் பிறகு அதிகாரிகள் கலந்தாலோசித்து இந்த வருடம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்தது.
கொரோனா அதிகமுள்ள 2 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு!
மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு அதன்படி கடந்த 19ம் தேதி மதிப்பீடு அடிப்படையிலான 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து கல்லூரிகளும் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என உயர் கல்வித்துறை அறிவித்தது. மேலும் கடந்த 26ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது.
TN Job “FB
Group” Join Now
மற்ற படிப்புகளை போல தமிழகத்தில் உள்ள 450 பொறியியல் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை 26ம் தேதி முதல் தொடங்கியது. முதல் நாள் 25,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் இந்த 2 நாட்களில் இதுவரை 41,363 பேர் விண்ணப்பித்துள்ளனர் என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தகவல் தெரிவித்துள்ளது. அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்துள்ள நிலையில் இந்த ஆண்டு கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது.