TNPSC Group 2, 2a தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்போர் கவனத்திற்கு – பாடத்திட்டத்தில் தொடரும் குழப்பம்!

0
TNPSC Group 2, 2a தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்போர் கவனத்திற்கு - பாடத்திட்டத்தில் தொடரும் குழப்பம்!
TNPSC Group 2, 2a தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்போர் கவனத்திற்கு - பாடத்திட்டத்தில் தொடரும் குழப்பம்!
TNPSC Group 2, 2a தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்போர் கவனத்திற்கு – பாடத்திட்டத்தில் தொடரும் குழப்பம்!

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் TNPSC தேர்வுகள் மூலமாக நிரப்பபட்டு வரும் நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் குரூப் 2, 2ஏ பிரிவுகளில் பல காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் TNPSC தேர்வு எந்த பாடத்திட்டத்தின் படி நடைபெறும் என தேர்வர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

TNPSC பாடத்திட்டம்:

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்பும் வெளியாகி வருகிறது. தற்போது குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வர்கள் தேர்வுக்காக தயாராகி வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தற்போது குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி தேர்வர்கள் லட்சக்கணக்கில் விண்ணப்பித்து வருகின்றனர். குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட 12 ஆயிரத்து 800 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தற்போது தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் மத்தியில் ஒரு குழப்பம் எழுந்துள்ளது. அதன் படி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் எந்த பாடத்திட்டத்தில் நடைபெறுமென தெளிவுபடுத்த வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ‘தல’ தோனியின் விண்டேஜ் ஆட்டம்!

இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகி லட்சக்கணக்கில் தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் தேர்வு புதிய பாடத்திட்டத்தின்படி நடக்குமா? அல்லது பழைய பாடத்திட்டத்தின்படி நடைபெறுமா? என்ற குழப்பம் போட்டி தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறுகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் டெட் தேர்வு புதிய பாடத்திட்டத்தின் படி நடத்தப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் TNPSC தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் பள்ளி பாடப்புத்தகங்களை கொண்டு தயாராவதால் இந்த குழப்பம் ஏற்படுகிறது. தேர்வின் வினாக்கள் 90 சதவீதம் பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து இடம்பெறுவதால் புதிய பாடத்திட்டமா? அல்லது பழைய பாடத்திட்டமா? என தேர்வர்கள் குழம்புகின்றனர். எனவே தேர்வாணையம் தேர்வர்களின் குழப்பத்தை தீர்க்க முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!