“பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா மனதை புண்படுத்திய கமெண்ட்ஸ் – வருத்தத்துடன் பேட்டி!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" ஐஸ்வர்யா மனதை புண்படுத்திய கமெண்ட்ஸ் - வருத்தத்துடன் பேட்டி!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா மனதை புண்படுத்திய கமெண்ட்ஸ் – வருத்தத்துடன் பேட்டி!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் விஜே தீபிகா. இந்நிலையில் அவர் முகப்பரு பிரச்சனை காரணமாக தனது சீரியலில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், விலகியதற்கான காரணத்தை என பேட்டி ஒன்றில் வருத்தமாக சொல்லி இருக்கிறார்.

விஜே தீபிகா:

விஜய் டிவியில் நெகட்டிவ் ரோல் இல்லாத ஒரே குடும்ப சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகும். 4 அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் பாசப்பிணைப்புகளும், அண்ணிகளின் பொறுப்புகளும் பற்றிய கதையாக இதுவரை சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த சீரியலில் கடைக்குட்டி தம்பி கண்ணன், தனது சொந்தகார பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதனால் குடும்பமே அவமானப்பட்டு கண்ணனை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய பாரதி கண்ணம்மா – விஜய் டிவி TRP ரேட்டிங்!

அதனால் மன உளைச்சலில் இருந்த அம்மா தற்போது இறந்தே போய்விட்டார். இதனால் இந்த சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பு அதிகரித்தது. ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகா தனது எதார்த்தமான நடிப்பால் கதைக்கு திருப்பு முனையாக இருந்தார். ஆனால் அவர் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென மாற்றப்பட்டார். இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். அவருக்கு பதிலாக நடிகை சாய் காயத்ரி இந்த ரோலில் நடிக்கிறார்.

சந்தியாவை பார்த்த மகிழ்ச்சியில் சரவணன், பஸ் விபத்தை அறிந்து பதட்டத்தில் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

அவர் சிறந்த நடிகை என விருது பெற்றுள்ளார். இந்நிலையில் சீரியலில் இருந்து திடீரென நீக்கப்பட்டதற்கு ஒரு பேட்டி ஒன்றில் தீபிகா விளக்கமளித்திருந்தார். அதில், தனக்கு முகப்பரு பிரச்சனை இருந்ததால் படக்குழுவினர், 3 மாதங்களில் சரி செய்ய வேண்டும் என சொல்லி இருந்தார்கள். மேலும் முகப்பருவை மறைக்க போதிய முயற்சிகளை எடுத்தார்கள். ஆனால் தற்போது பரு அதிகமாகி இருக்கிறது. அதனால் அந்த சீரியலில் இருந்து நீக்கிவிட்டார்கள் என அவர் தெரிவித்தார். மேலும் ச்சீ இந்த முகத்த எல்லாம் எப்படி டிவியில பாக்றது என மோசமாக ரசிகர்கள் கமெண்ட் செய்தார்கள். அவை எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது என வருத்தமாக அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!