பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய பாரதி கண்ணம்மா – விஜய் டிவி TRP ரேட்டிங்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய பாரதி கண்ணம்மா - விஜய் டிவி TRP ரேட்டிங்!
பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய பாரதி கண்ணம்மா - விஜய் டிவி TRP ரேட்டிங்!
பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய பாரதி கண்ணம்மா – விஜய் டிவி TRP ரேட்டிங்!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி இடம் உள்ள நிலையில் இந்த வார TRP ரேட்டிங்கில் ‘பாரதி கண்ணம்மா’ முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் டிவி சீரியல்களில் நடித்து சினிமா வாய்ப்புகளை பெற்றவர்கள் பலர் உள்ளனர். ஒரு சிலர் முன்னணி தொலைக்காட்சிகளில் இருந்து விஜய் டிவி சீரியல்களுக்கு வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சில முன்னணி சினிமா நடிகைகள் கூட சீரியல்களில் களமிறங்கி உள்ளனர். அதனால் தொடர்ந்து விஜய் டிவி சீரியல்கள் TRPயில் முன்னிலையில் உள்ளது.

சந்தியாவை பார்த்த மகிழ்ச்சியில் சரவணன், பஸ் விபத்தை அறிந்து பதட்டத்தில் குடும்பத்தினர் – இன்றைய எபிசோட்!

இந்நிலையில் இந்த 36வது வாரத்திற்கான TRP ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் வழக்கம் போல பாரதி கண்ணம்மா சீரியல், 12.6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதே போல இரண்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் 11.6 புள்ளிகள் பெற்றுள்ளது. எப்போதும் இரண்டாவது இடத்தில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது மூன்றாம் இடத்தில் 10.6 புள்ளிகளுடன் இருக்கிறது. அதே போல நான்காம் இடத்தில் ராஜா ராணி 2 சீரியலும், கடைசி இடத்தில் 2.8 புள்ளிகளுடன் தேன்மொழி பி.ஏ சீரியல் உள்ளது.

செழியன் மனதை மாற்றும் ஜெனி, அமிர்தா வீட்டிற்கு செல்லும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

என்ன தான் காலை முதல் மாலை வரை சீரியல்கள் ஒளிபரப்பினாலும், மக்கள் மனம் கவர்ந்த சீரியல்கள் மட்டுமே வாரம் தோறும் TRP ரேட்டிங்கில் முதலிடம் பிடிக்கிறது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர். பாரதி கண்ணம்மாவில் இரட்டை குழந்தைகள் குறித்த உண்மை கண்ணம்மாவிற்கு 8 வருடங்களுக்கு பின்னர் தெரிந்ததால், ரசிகர்களுக்கு விறுவிறுப்பு அதிகரித்துள்ளது. அதே போல பாக்கியலட்சுமி சீரியலில் அழுகை காட்சிகள் இல்லாமல் இருப்பதால் அதற்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!