‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் DNA டெஸ்ட் எப்போ தான் எடுப்பீங்க? ரசிகர்கள் கமெண்ட்டில் குமுறல்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் DNA டெஸ்ட் எப்போ தான் எடுப்பீங்க? ரசிகர்கள் கமெண்ட்டில் குமுறல்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் DNA டெஸ்ட் எப்போ தான் எடுப்பீங்க? ரசிகர்கள் கமெண்ட்டில் குமுறல்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் DNA டெஸ்ட் எப்போ தான் எடுப்பீங்க? ரசிகர்கள் கமெண்ட்டில் குமுறல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியானதை அடுத்து ரசிகர்கள் அது குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர். சீக்கிரமாக டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பது போன்ற காட்சிகளை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியல்

தெலுங்கில் ‘கார்த்திகை தீபம்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் சீரியலின் தமிழ் ரீமேக் தான், பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ஆரம்பம் முதலே ரசிகர்களை கவர்ந்தது என்று தான் கூற வேண்டும். கருப்பு நிறத்தில் இருக்கும் கதாநாயகியை அனைவரும் வெறுக்கும் சமயத்தில் கதாநாயகன் பாரதி மட்டும் அவரை முழு அன்புடன் நேசித்து காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார். குடும்பமே இருவரையும் எதிர்க்கின்றனர். ஆனால், இருவரும் அன்பாக வாழ்ந்து வரும் போது தான் பாரதியை ஒரு தலையாக காதலித்த அவரது தோழி வெண்பா கண்ணம்மா பற்றி பாரதியிடம் தவறாக கூறி அவர் மீது சந்தேகம் கொள்ள வைக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை இந்த வயதில் அடித்து திருத்த முடியுமா? மனம் திறந்த ராமமூர்த்தி!

இதனால் இருவரும் இரட்டை குழந்தைகள் பிறந்து 8 வருடங்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரையும் இணைக்க பாரதியின் குடும்பத்தினர் தங்களால் ஆன முயற்சிகளை செய்து வருகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் தற்போது பாரதி மற்றும் வெண்பா இருவரையும் தவிர லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் பாரதிக்கு பிறந்த குழந்தைகள் என்று அனைவருக்குமே தெரியும். கூடுதல் கொடுமை, பாரதி அந்த நகரத்தின் சிறந்த டாக்டர் வேறு. கண்ணம்மாவை சந்தேகம் கொள்வதாக இருந்தால், நேரடியாக ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்து விட்டால் தெரிந்து விட போகிறது.

‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினாவிற்கு பிறக்கப்போவது ஆணா? பெண்ணா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

ஆனால், அதனை செய்யாமல் தற்போது வரை சீரியலை இழுத்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஒரு ப்ரோமோ வெளியானது. அதில் பாரதி கண்ணம்மாவை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய இருக்கிறார். தான் பெரிய தொகை ஒன்றினை ஜீவனாம்சமாக தர இருப்பதாகவும் அதனை வாங்கி கொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார். இதனை பார்த்து விட்டு ரசிகர்கள் அனைவரும் பாரதியை முதலில் டெஸ்ட் எடுக்க சொல்லுங்கள், பின்னர் விவாகரத்து பற்றி பேசி தீர்த்து கொள்ளலாம் என்று கூறி வருகின்றனர். எப்போ தான் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பீங்களோ என்றும் கேட்டு வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!