தமிழகத்தில் நாளை மறுநாள் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – தேர்வுத் துறை அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்வுத் துறை அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - தேர்வுத் துறை அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – தேர்வுத் துறை அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நாளை மறுநாள் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு தான் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 20 ஆம் தேதி தான் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. கடந்த கல்வியாண்டுகளை ஒப்பிடுகையில் இந்தாண்டு தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்துள்ளது. அதிலும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் கலந்துகொள்ளாத மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை மாதத்திற்குள் மறுதேர்வு வைக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மே மாதம் முதல் துவங்கப்பட்டது. கிட்டத்தட்ட 8 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். இந்நிலையில், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் அதாவது வரும் திங்கட்கிழமை அன்று வெளியிடப்பட இருப்பதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது. மேலும்,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவினை காலை 10 மணி முதல் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஒரே மாதிரி அமைப்பில் கடைகள்!

அதாவது தேர்வு எழுதிய மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று மாணவர்களின் தேர்வுக்கான பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனவும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது. மேலும், பள்ளி மாணவ-மாணவியர்களின் செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளையும் குறுஞ்செய்தி வாயிலாக அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here