‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து தன் மனைவியுடன் சிபி எடுத்துக் கொண்ட புகைப்படம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
'பிக் பாஸ்' வீட்டில் இருந்து தன் மனைவியுடன் சிபி எடுத்துக் கொண்ட புகைப்படம் - ரசிகர்கள் உற்சாகம்!
'பிக் பாஸ்' வீட்டில் இருந்து தன் மனைவியுடன் சிபி எடுத்துக் கொண்ட புகைப்படம் - ரசிகர்கள் உற்சாகம்!
‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து தன் மனைவியுடன் சிபி எடுத்துக் கொண்ட புகைப்படம் – ரசிகர்கள் உற்சாகம்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறியுள்ள சிபி தன் மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. இந்த படங்களுக்கு அதிக லைக்குகளும் குவிந்து வருகிறது.

சிபி சந்திரன்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வரை அந்த அளவிற்கு பிரபலமோ அல்லது ரசிகர் கூட்டமோ இல்லாத பல நடிகர்களும், நடிகைகளும் அதன் பிறகு பல ஆர்மிகளின் தலைவர்களாக இருந்து வருகின்றனர். இதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் ஓவியா முதல் தற்போதைய சீசனில் உள்ள சிபி வரை பலரும் முன் உதாரணமாக இருப்பார்கள். இவர்கள் முன்னதாக திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த அளவிற்கு புகழை அடையவில்லை. இந்த நிகழ்ச்சியில் அவர்களின் உண்மையான குணத்தை புரிந்து கொண்ட பின்னர் அதிக ரசிகர் கூட்டம் சேர்ந்தது.

த்ரிஷா முதல் சத்யராஜ் வரை – கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரையுலக பிரபலங்கள்!

தற்போது நடந்து வரும் பிக் பாஸ் 5வது சீசனில் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த சிபி கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இருந்து தனி ஒருவனாக தனக்கான பாதையில் தைரியமாக பயணித்து வந்தார். ஆனால் பல விமர்சனங்களை இவருக்கு பெற்று தந்தது ஒரே ஒரு டாஸ்க் தான். ஸ்கூல், ஹாஸ்டல் போல் வந்த டாஸ்கில் சிபி வார்டனாக இருந்தார். டாஸ்கின் படி மிகவும் நேர்மையான மற்றும் கண்டிப்பானவராக நடந்து கொள்ள வேண்டும் என்பதால் முழுமையாக அந்த கதாபாத்திரமாகவே மாறி விட்டார். இதனால் இவருக்கும் அக்ஷராவிற்கு நடந்த சண்டை அனைவரும் அறிந்ததே.

Vijay Tv Bigg Boss 5 Promo | ராஜு, நிரூப்க்கு டிப்ஸ் அளித்த சிபி! உற்சாகத்தில் ரசிகர்கள்!

பிரீஸ் டாஸ்க்கின் போது சிபியின் மனைவி மற்றும் அவரது அப்பா வந்தனர். அப்போது சிபியை பற்றி பல விஷயங்களை அவர்கள் கூறி சென்றது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இவர் பிக் பாஸ் வீட்டில் மட்டுமில்லாமல் உண்மையாகவே மிகவும் நேர்மையாகவும், அமைதியாகவும் தான் நடந்து கொள்வார் என்று தெரிந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிக் பாஸ் அனுப்பிய ரூ.12 லட்சம் பணப்பெட்டியுடன் இதற்கு மேல் தான் இருந்தால் நடிப்பது போல் ஆகிவிடும் என்று கூறி வெளியேறினார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள சிபி தற்போது தன் மனைவி ஸ்லோகா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!