த்ரிஷா முதல் சத்யராஜ் வரை – கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரையுலக பிரபலங்கள்!

0
த்ரிஷா முதல் சத்யராஜ் வரை - கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரையுலக பிரபலங்கள்!
த்ரிஷா முதல் சத்யராஜ் வரை - கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரையுலக பிரபலங்கள்!
த்ரிஷா முதல் சத்யராஜ் வரை – கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரையுலக பிரபலங்கள்!

சமீப காலமாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவாறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. இதில் யார் யாருக்கு பாதிப்புகள் ஏற்பட்டது என்பதை இப்பதிவில் விரிவாக காணலாம்.

கொரோனா தொற்று

நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வர எல்லா இடங்களிலும் ஒரு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் தொற்றானது சாதாரண மக்கள் துவங்கி பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. என்னதான் பலத்த பாதுகாப்பு அம்சங்களை கைக்கொண்டாலும், ஏதாவதொரு வழியில் இந்த நோய் தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு சென்றிருக்கிறது.

Vijay Tv Bigg Boss 5 Promo | ராஜு, நிரூப்க்கு டிப்ஸ் அளித்த சிபி! உற்சாகத்தில் ரசிகர்கள்!

அந்த வகையில் கடந்த சில வாரங்களாக சினிமா துறையை சேர்ந்த பல நட்சத்திங்கள் இந்த நோய் தொற்று தாக்கத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். தென் இந்திய சினிமாவில் முக்கிய புள்ளியாக இருந்து வரும் நடிகை திரிஷா புத்தாண்டுக்கு முன்பாக கொரோனவால் பாதிக்கப்பட்டதாகவும், இதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவதாகவும் சமீபத்தில் அறிவித்தார். அதே போல தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவும் இந்த கொடிய தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

நடிகை மீனாவின் குடும்பத்தில் உள்ள அனைவரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும் நடிகர் அருண் விஜய், ஷெரின், நடிகர் சத்யராஜ், இசையமைப்பாளர் தமன் ஆகியோருக்கும் இந்த நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இப்போது கொரோனவால் பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இதில் சிலர் தடுப்பூசிகளை எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இந்த சூழ்நிலையை கடந்து செல்ல வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!