விழாக்கோலம் பூண்ட மதுரை …. கோலாகலமாக இன்று சித்திரை திருவிழா தொடக்கம்…!

0

விழாக்கோலம் பூண்ட மதுரை …. கோலாகலமாக இன்று சித்திரை திருவிழா தொடக்கம்…!

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனால் பக்தர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

சித்திரை திருவிழா தொடக்கம்:
  • ஆண்டுதோறும் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதங்களில் நடைபெறும்.
  • அதேபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா இன்று தொடங்கி ஏப்ரல் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அன்றைய நாட்களில் மதுரையே மிகவும் அழகாகவும் பிரசித்தி பெற்றும் காணப்படும்.
  • இந்த ஒவ்வொரு நிகழ்வையும் காண பல்வேறு கணக்கான மக்கள் அங்கு படையெடுத்து நிற்பார்கள். இன்று காலை 9:55 மணிக்கு மேல் 10;19 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது.
  • இந்த நாட்களில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் காலை, இரவு என இரு வேலைகளிலும் பல்வேறு வாகனங்களில் உலா வருவர்.

மீண்டும் வேகமெடுக்கும் மற்றொரு தொற்றுநோய்…… அச்சத்தில் உலக நாடுகள்…

  • ஏப்ரல் 19ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், திக்கு விஜயம் ஏப்ரல் 20ம் தேதியும் நடைபெற உள்ளது. நிகழ்வின் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
  • இதற்கான முன்பதிவுகள் நாளையுடன் முடிவடைய உள்ளன. 22 ஆம் தேதி மாசி வீதிகளில் சுவாமி அம்பாள் தேரோட்டம் நடைபெறும்.
  • அதனைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெறும்.5.51 மணிக்கு மேல் 6:10க்குள் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • அதன் பின் ஏப்ரல் 27ஆம் தேதி காலை 10:32 மணிக்கு மேல் 11 மணிக்குள் அழகர் அவரின் இருப்பிடம் வந்து சேருவார்.
  • இந்த சித்திரை திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசார்கள் ஈடுபட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!