சென்னை: கிடுகிடுவென சரிந்த ஆபரணத் தங்கத்தின் விலை – கொண்டாட்டத்தில் நகைப்பிரியர்கள்!

0
சென்னை: கிடுகிடுவென சரிந்த ஆபரணத் தங்கத்தின் விலை - கொண்டாட்டத்தில் நகைப்பிரியர்கள்!
சென்னை: கிடுகிடுவென சரிந்த ஆபரணத் தங்கத்தின் விலை - கொண்டாட்டத்தில் நகைப்பிரியர்கள்!
சென்னை: கிடுகிடுவென சரிந்த ஆபரணத் தங்கத்தின் விலை – கொண்டாட்டத்தில் நகைப்பிரியர்கள்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து என்றும் இல்லாத அளவுக்கு இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சரிவை கண்டுள்ளது. அதனால் இன்றே நீங்கள் தங்க நகைகளை வாங்கி சேமித்து வைத்து கொள்ளுங்கள். இன்றைய தங்க விலை நிலவரத்தை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

தங்கம் விலை:

தமிழகத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டே இருக்கிறது. அதனால் பொதுமக்கள் தங்க நகைகளை எப்போது வாங்கினால் அதிக லாபம் கிடைக்குமென்று காத்திருக்கின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிந்து கொண்டு வருகிறது. மேலும் தங்கத்தின் விலை குறையுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று என்றும் இல்லாத அளவுக்கு அதிரடியாக குறைந்துள்ளது. இது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து சவரனுக்கு ரூ.38,120க்கும் மற்றும் ஒரு கிராம் தங்கம் ரூ.4,765க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை மேலும் குறைந்தது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 256 அதிரடியாக குறைந்து சவரனுக்கு ரூ.37,864க்கும் இதே போல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.32 குறைந்து ரூ.4,733க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் பெற்றோர்களை மிரட்டும் தனியார் பள்ளிகள்? பணம் கொடுத்தால் மட்டுமே டிசி!

இதையடுத்து தற்போது மாலை நிலவரப்படி, மேலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு குறைந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று கிடுகிடுவென ரூ.656 சரிந்து சவரனுக்கு ரூ.37,464க்கு விற்பனையாகிறது. இதே போல் கிராமுக்கு ரூ.82 குறைந்து ஒரு கிராம் ரூ.4,683க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையும் இன்று கிராமுக்கு ரூ.70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.65.30க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.65,300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!