தமிழக சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு – முழு விவரம் இதோ!

0
தமிழக சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு - முழு விவரம் இதோ!
தமிழக சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு - முழு விவரம் இதோ!
தமிழக சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு – முழு விவரம் இதோ!

தமிழகத்தில் உள்ள சென்னை பல்கலைக் கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் இன்று எதிர்பார்த்து வந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் https://results.unom.ac.inhttps://exam.unom.ac.in மற்றும் https://egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை www.unom.ac.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

FD திட்டத்தில் பணத்தை முதலீடு செய்பவர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் குறித்த விவரம்!

மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் கையெழுத்திட்டு 300 ரூபாய் வரைவு காசோலையினை The Registrar university of madras என்கிற பெயரில் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 – வது செமஸ்டரில் ஒரு தாள் மற்றும் அரியர் வைத்துள்ள இளநிலை மாணவர்களுக்கு உடனடி எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும். அதே போல 4-வது செமஸ்டர் தேர்வில் 1 அரியர் மட்டும் வைத்திருந்தால் உடனடியாக எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மறுகூட்டல் மற்றும் அரியருக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் தங்கள் பயின்ற கல்லூரி வாயிலாகவே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை மாணவர்கள் 350 ரூபாயும், எம்.பி.ஏ., எம்.எல். சட்டப்படிப்பு மாணவர்கள் 600 ரூபாயும் செலுத்த வேண்டும். சிறப்பு தேர்வு செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றே முடிவுகள் வெளியானதை அடுத்து சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய முடியவில்லை. தற்போது தான் இணையதளம் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!