FD திட்டத்தில் பணத்தை முதலீடு செய்பவர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் குறித்த விவரம்!

0
FD திட்டத்தில் பணத்தை முதலீடு செய்பவர்கள் கவனத்திற்கு - வட்டி விகிதம் குறித்த விவரம்!
FD திட்டத்தில் பணத்தை முதலீடு செய்பவர்கள் கவனத்திற்கு - வட்டி விகிதம் குறித்த விவரம்!
FD திட்டத்தில் பணத்தை முதலீடு செய்பவர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் குறித்த விவரம்!

இந்தியாவில் வங்கிகளில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளன. இதில் நிலையான வைப்புத்தொகை எனப்படும் ஃபிக்சட் டெபாசிட் மிகவும் பாதுகாப்பான மற்றும் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வங்கிகளில் FD திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை குறித்து விரிவாக பார்ப்போம்.

FD சேமிப்பு திட்டம்

இந்தியாவில் வங்கிகளில் அதிக லாபம் தரும் வகையில் பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளது. இதில் குறிப்பாக பிக்சட் டெபாசிட் திட்டத்தில் பெரும்பாலானோர் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். மேலும் இதில் பங்கு சந்தை மற்றும் மற்ற முதலீட்டு திட்டங்களை விட நிலையான வருமானத்தை பெற முடிகிறது. மேலும் இதில் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 இன் கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. இதில் வழங்கப்படும் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு வங்கிகளிலும் மாறுபடுகிறது. அதனால் எந்த வங்கியில் அதிக வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது என தெரிந்து கொண்டு தங்களின் பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் UPI வசதி – அமைச்சர் அறிவிப்பு!

முதலில் IndusInd வங்கியில் 5 வருட காலத்திற்கு 6.5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதில் முதலீடு செய்வதால் குறைந்த நாட்களில் அதிக லாபத்தை பெற முடியும். இதையடுத்து RBL வங்கியில் 2 முதல் 3 ஆண்டுகள் FD திட்டத்திற்கும் 6.5% வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. இதையடுத்து வரி சேமிப்பு திட்டத்தில் 6.3% வட்டி விகிதம் கிடைக்கிறது. இதனால் இந்த வங்கியில் மூத்த குடிமக்கள் 6.8% வருமானத்தைப் பெற முடியும். இதன் மூலமாக கிடைக்கும் சேமிப்பு தொகையானது இவர்களின் முதிர்வு காலத்தில் பேருதவியாக இருக்கும்.

IDFC வங்கியில் 6.25 சதவீதமும் HDFC மற்றும் ICICI வங்கியில் 6.1 சதவீதம் வரையும் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதாவது ரூ.1.5 லட்சம் என்பது ரூ.2.03 லட்சமாக மாறும் என்று கூறப்படுகிறது. மேற்கண்ட வட்டி விகிதங்களில் உங்களின் பணத்தை முதலீடு செய்வதால் குறைந்த நாட்களில் அதிக சேமிப்பு தொகையை பெற முடியும். ஆனால் இந்த திட்டம் நீண்ட கால சேமிப்பிற்கு மட்டுமே மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் முதிர்வு காலம் முடியும் முன் இத்திட்டத்தில் உள்ள கணக்கை முடித்தால் முழுமையான லாபத்தை பெற முடியாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!