சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

0
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

ரஷ்யா உக்ரைன் போர், பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு:

அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன்- ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. மேலும் கடந்த ஜூன் மாத மத்தியில் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த அடுத்த நாட்களில் தங்க விலை உயர்ந்து காணப்பட்டது. மேலும் இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து, சவரன் ரூ.38,280 -க்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாளே தங்க விலை சவரனுக்கு ரூ.38,336 ஆக அதிகரித்தது.

TN Job “FB  Group” Join Now

இதனால் நகைப் பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் 28,29,30 ஆகிய தேதிகளில் தங்க விலை எதிர்பாராத வகையில் குறைந்து காணப்பட்டது. ஒரு கிராம் ரூ.4,800-க்கு குறைவாகவும், ஒரு சவரன் ரூ. 38-க்கு குறைவாகவும் விற்பனையானது. இதனால் இது வாடிக்கையாளர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், இதற்கு நேர்மாறாக இம்மாத தொடக்கம் முதல், தங்கத்தின் விலை உச்சம் தொட்டது. அதாவது ஜூலை 1-ல் தங்கத்தின் விலை ரூ.856 உயர்ந்து, சவரன் ரூ.38,280 -க்கும், ஒரு கிராம் ரூ.4,785க்கும் விற்பனையானது.

சென்னையில் நாளை (ஜூலை 6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதற்கு மறுநாள் சவரன் ரூ.56 உயர்ந்து, ரூ.38,336-க்கும், ஒரு கிராம் ரூ.4,792-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.56 உயர்ந்துள்ளது. சென்னையில் சவரனுக்கு ரூ.38,440-க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.4,805-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.64.70 -க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.64,700 க்கும் விற்கப்பட்டு வருகிறது. இப்படி தங்க விலை உயர்ந்து கொண்டே சென்றால் நடுத்தர மக்கள், தங்க நகைகள் வாங்க முடியாத சூழலுக்கு தள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!