இளையராஜா பாடல்களை பயன்படுத்த பிரபல நிறுவனங்களுக்கு இடைக்கால தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

0
இளையராஜா பாடல்களை பயன்படுத்த பிரபல நிறுவனங்களுக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு!
இளையராஜா பாடல்களை பயன்படுத்த பிரபல நிறுவனங்களுக்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு!
இளையராஜா பாடல்களை பயன்படுத்த பிரபல நிறுவனங்களுக்கு இடைக்கால தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றம், பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு உரிமையுள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு:

சில வருடங்களாக தனது பாடல்களுக்கான காப்புரிமை பிரச்னையில் இளையராஜா தீவிரமாக இயங்கி வருகிறார். இசை நிகழ்ச்சிகள், ஆன்லைன், டிவி நிகழ்ச்சிகள் என்று பல இடங்களிலும் தனது பாடல்கள் மூலம் ஒரு சிலர் வருவாய் ஈட்டி வருவதாக அவர் குற்றம் சாட்டி வந்தார். இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த பாடல்களை, அகி இசை நிறுவனம், எக்கோ மியூசிக் நிறுவனம் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் தன்னுடைய அனுமதி பெறாமல் பயன்படுத்த தடை கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு – நிதித்துறை அமைச்சர் விளக்கம்!

.மேலும், அவரது பாடல்களை திரையரங்குகளை தவிர வேறு எங்கும் பயன்படுத்த கூடாது என்றும் குறிப்பாக ஆன்லைன் உள்ளிட்ட ரேடியோ நிறுவனங்கள், இசை போட்டிகள் உள்ளிட்டவைகளில் தன்னுடைய அனுமதி பெறாமல் பாடல்களை பயன்படுத்தக் கூடாது என்று அவர் தரப்பில் குறிப்பிட்டுருந்தார். இந்த நிலையில் ஒப்பந்தம் முடிந்த பின்பு மற்றும் காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை இசை நிறுவனங்கள் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

தமிழக இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு – அரசுக்கு வலியுறுத்தல்

இந்த வழக்கை விசாரித்த போது, இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் உரிய காப்புரிமை பெறாமல் பயன்படுத்துவது ஒளிப்பதிவு சட்டப்படி தவறு என்று விவாதிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு உரிமையுள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், எகோ, அகி, யுனிசிஸ், கிரி டிரேடிங் ஆகிய இசை நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கு வரும் மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here