மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு – நிதித்துறை அமைச்சர் விளக்கம்!

0
மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு - நிதித்துறை அமைச்சர் விளக்கம்!
மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு - நிதித்துறை அமைச்சர் விளக்கம்!
மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு – நிதித்துறை அமைச்சர் விளக்கம்!

கேரளாவில் 2022 – 23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறித்து மாநில நிதித்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

ஓய்வு பெறும் வயது:

இந்தியாவில் மத்திய மாநில அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களின் வயது வரம்பை அரசு நிர்ணயித்துள்ளது. இந்த ஓய்வு பெறும் வயது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுப்படுகிறது. பல மாநிலங்களில் தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆகவும், சில மாநிலங்களில் 60 ஆகவும் இருந்து வருகிறது. அண்மையில் தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஆந்திராவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 திலிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு – அரசுக்கு வலியுறுத்தல்

அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் மட்டும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 56 ஆகவே உள்ளது. கடந்த 2011 – 2016 ம் ஆண்டு ஆட்சி காலத்தில் காங்கிரசின் உம்மண் சாண்டி ஆட்சியில் இந்த ஓய்வூதிய வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது அதே நடைமுறையே அமலில் உள்ளது. இதனை 57 ஆக உயர்த்த மாநில அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 2022 – 2023 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 7வது ஊதிய கமிஷன்! முதல்வர் விளக்கம்!

இது குறித்து விளக்கம் அளித்த நிதித் துறை அமைச்சர் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தின் வரவு செலவுத் திட்டத்தை உயர்த்துவது தொடர்பாக பல திட்டங்கள் மாநில அரசிடம் உள்ளது. நலத்திட்ட ஓய்வூதியம் பெறும் தகுதியற்ற நபர்களை ஒடுக்கும் நடைமுறைகள் தொடரும் என்றும் கூறியுள்ளார். இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here