தமிழக இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு – அரசுக்கு வலியுறுத்தல்

0
தமிழக இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு - அரசுக்கு வலியுறுத்தல்
தமிழக இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு - அரசுக்கு வலியுறுத்தல்
தமிழக இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு – அரசுக்கு வலியுறுத்தல்

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது மாநிலம் முழுவதும் தொழில் நிறுவனங்களில் 75% வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் இன்றைய தமிழக அரசுக்கு உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நீண்ட நாட்களாக வேலையின்மை நிலவி வந்தது . இந்த நிலையில் வேலைவாய்ப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலை நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் .இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல கோடி ரூபாயில் நிறுவப்படும் பல்வேறு தொழிற்சாலைகள் மூலம் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது.

IPL 2022: மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டிக்கான உத்தேச 11 அணி! ரசிகர்கள் உற்சாகம்!

இருப்பினும் தமிழகத்தில் படித்த, தொழிற்பயிற்சி பெற்ற இளைஞர்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளில், ஏன் தமிழ்நாட்டு இளைஞர்கள் பணி அமர்த்தப்படவில்லை ஏனென்றால் தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புகள் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள ஆந்திரம், தெலுங்கானம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தமிழர்களுக்கு வேலை கிடைக்காது.

TNPSC 151 துறைத்தேர்வுகள் – தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!

தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் வட மாநிலத்தவர்களை பணியில் உள்ளனர். மேலும் குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ராஜஸ்தானில் 75% பணிகளும், உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் மாத ஊதியம் ரூ.40,000 வரை கொண்ட பணிகளில் 80% தமிழக இளைஞர்கள் இளம் பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற வேண்டும். இந்த சட்டத்தை மார்ச் மாதத்தில் கூட இருக்கும் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!