தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை – ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை - ஐகோர்ட் முக்கிய உத்தரவு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை - ஐகோர்ட் முக்கிய உத்தரவு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை – ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பானது 12 மாதங்களாக உயர்த்தப்பட்டு, 2021ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் அரசு பெண் ஊழியர்களின் 3-வது பிரசவத்திற்கு விடுமுறை வழங்கலாம் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

முக்கிய உத்தரவு:

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்கள், சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மணமான பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பானது கடந்த 2016 ஆம் ஆண்டு 6 மாதங்களாக இருந்தது. மேலும் 9 மாதங்களாக அதாவது 270 நாட்களாக உயர்த்தப்பட்டது. இந்த விடுப்பு பிரசவத்துக்கு முன், பின் என பிரித்து எடுத்துக் கொள்ளவும், விடுப்பு காலத்தில் முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டது. இதற்காக அடிப்படை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்தார்.

தேசிய தலைநகரில் காலவரையற்ற முழு ஊரடங்கு உத்தரவு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!

இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் பணியாற்றி வரும் தீபலெட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 3-வது முறையாக கர்ப்பம் ஆனேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் 20.9.2021 முதல் மகப்பேறு விடுமுறை கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் முதல் 2 பிரசவத்துக்கு மட்டும்தான் மகப்பேறு விடுமுறை வழங்க முடியும் என்று எனது விண்ணப்பத்தை மதுரை மாநகராட்சி உதவி கமிஷனர் நிராகரித்து விட்டார். மதுரை மாநகராட்சி உதவி கமிஷனர் அளித்த உத்தரவை ரத்து செய்து, தனது 3-வது பிரசவத்துக்கு 12 மாதம் மகப்பேறு விடுமுறை வழங்கும்படி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசு கடந்த 1993ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில் திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் உயிருடன் இருக்கும் 2 குழந்தைகளுக்கான பிரசவத்துக்கு மகப்பேறு விடுமுறை வழங்கலாம் மற்றும் அதே நேரத்தில் இது சம்பந்தமான பிரதான விதியில், திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு 3-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மகப்பேறு விடுமுறை வழங்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நீதிமன்றம், விதிகளை விட பிரதான விதி மேற்பட்டதாக கருதுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அரசு பெண் ஊழியர் 3 வது குழந்தைக்கு மகப்பேறு விடுமுறை பெற தகுதியானவர், அதனால் மனுதாரர் தீபலெட்சுமிக்கு 12 மாதம் மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!