தேசிய தலைநகரில் காலவரையற்ற முழு ஊரடங்கு உத்தரவு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!

0
தேசிய தலைநகரில் காலவரையற்ற முழு ஊரடங்கு உத்தரவு அமல் - அரசு அதிரடி அறிவிப்பு!
தேசிய தலைநகரில் காலவரையற்ற முழு ஊரடங்கு உத்தரவு அமல் - அரசு அதிரடி அறிவிப்பு!
தேசிய தலைநகரில் காலவரையற்ற முழு ஊரடங்கு உத்தரவு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருவதை தொடர்ந்து காலவரையற்ற ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. அதாவது, பல தசாப்தங்களாக அந்நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் கையாள்வதாக கூறி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவின் கொழும்பு இல்லத்திற்கு வெளியே நடத்தப்பட்ட போராட்டங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மக்களை அப்புறப்படுத்த முயலும் பொழுது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தமிழகத்தில் கொரோனா நான்காவது அலை பரவல் – மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?

இந்த வன்முறைக்கு பிறகு இன்று (ஏப்ரல்.1) அதிகாலை இலங்கையின் முக்கிய நகரமான கொழும்பில் உள்ள பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக தெற்காசிய நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை கையாண்டதை கண்டித்து, ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுத்ததை அடுத்து இப்போது காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் போலீசார் உண்மையான தோட்டாக்களால் சுட்டார்களா அல்லது ரப்பர் தோட்டாக்களால் சுட்டார்களா என்பது உடனடியாக தெரியவில்லை என்றாலும் குறைந்த பட்சம் ஒருவர் காயமடைந்ததாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை எக்கச்சக்கமாக அதிகரிக்க, சிலிண்டர், மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்நாட்டில் ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 13 மணி நேரத்திற்கு மின்சாரம் இல்லாத சூழல் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!