சென்னை: அதிரடியாக சவரனுக்கு ரூ.160 குறைந்த தங்க விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

0
சென்னை: அதிரடியாக சவரனுக்கு ரூ.160 குறைந்த தங்க விலை - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: அதிரடியாக சவரனுக்கு ரூ.160 குறைந்த தங்க விலை - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: அதிரடியாக சவரனுக்கு ரூ.160 குறைந்த தங்க விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்தது என நகை வியாபாரிகள் தெரிவித்தனர். தங்க விலை குறைவு தகவல் நகைப்பிரியர்களுக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி:

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்கள் தங்க நகைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டாண்டு காலமாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வந்ததற்கான காரணமே இது தான். சிக்கலின் போது நமக்கு தேவைப்படும் பணத்தை, தங்க நகைகளை அடகு வைத்து ரெடி செய்து கொள்ளலாம். மேலும் தமிழகத்தில் அட்சயதிரிதியை அண்மையில் கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அட்சய திருதியை நாளில் கடைகளில் நேரடி விற்பனை நடக்கவில்லை.

Exams Daily Mobile App Download

இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்ததால் பொதுமக்கள் பெருமளவில் கடைகளுக்கு வந்து நகைகள் வாங்கினர். இந்த நிலையில் கடந்த 16ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,040க்கு விற்கப்பட்டது. 17ம் தேதி சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,200க்கு விற்பனையானது. தொடர்ச்சியாக 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்பு நகைபிரியர்களை கவலையில் ஆழ்த்தி வந்தது. இந்நிலையில் 18ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ.4,765க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் 38,120க்கும் விற்கப்பட்டது.19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்க மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், அன்றைய தினம் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது.

ரூ.1 லட்சம் ஊதியத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – ஜூன் 23 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,775க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,200க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 10 குறைந்து ஒரு கிராம் ரூ.4,765க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.38,120க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,960க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் 20 ரூபாய் குறைந்து ரூ. 4,745க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து ரூ.66 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!