ரூ.1 லட்சம் ஊதியத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – ஜூன் 23 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

0
ரூ.1 லட்சம் ஊதியத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை - ஜூன் 23 விண்ணப்பிக்க கடைசி நாள்..!
ரூ.1 லட்சம் ஊதியத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை - ஜூன் 23 விண்ணப்பிக்க கடைசி நாள்..!
ரூ.1 லட்சம் ஊதியத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – ஜூன் 23 விண்ணப்பிக்க கடைசி நாள்..!

BSF எனப்படும் எல்லை பாதுகாப்பு படை கடந்த மாதம் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. SI (Master), HC (Master) & CT (Crew) ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 281 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் (23.06.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

BSF வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில் எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலியாக உள்ள SI (Master), SI (Engine Driver), SI (Workshop), HC (Master), HC (Engine Driver), HC (Workshop)-Trade, CT (Crew) ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 281 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் SI (Master) மற்றும் SI (Engine Driver) பணிக்கு 12 வது தேர்ச்சி பெற்றவர்கள், SI (Workshop) பணிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma / Degree தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் HC (Master), HC (Engine Driver), HC (Workshop)-Trade, CT (Crew) ஆகிய பணிகளுக்கு 10 வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

SI (Master) & SI (Engine Driver) பணிக்கு 22 வயது முதல் 28 வயது எனவும், மற்ற அனைத்து பணிகளுக்கும் 20 வயது முதல் 25 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம். SI (Master), SI (Engine Driver) மற்றும் SI (Workshop) பணிக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை என்றும், HC (Master), HC (Engine Driver) மற்றும் HC (Workshop)-Trade பணிக்கு ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை என்றும், CT (Crew) பணிக்கு ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை என்றும் மாத சம்பளம் கொடுக்கப்படும். மேலும் இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் எழுத்து தேர்வு , மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our TNPSC Coaching Center

Group-B தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.200/- மற்றும் Group-C தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.100/- ,தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் SC / ST / BSF & Ex-Servicemen ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எல்லை பாதுகாப்பு படை பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இப்பதிவின் முடிவில் உள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று, இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நாளை (23.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி (23.06.2022) என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BSF Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!