WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் | Chat backup எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்!

0
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் | Chat backup எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்!
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் | Chat backup எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்!
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் | Chat backup எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் செய்திகளை மிகவும் பாதுகாப்பான அமைப்பாக மாற்றுவதற்கான புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான புதிய அம்சங்களை குறித்து இந்த பதிவில் காண்போம்.

புதிய அப்டேட்:

வாட்ஸ்அப் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் சேவையாகும். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் மட்டுமல்லாமல் KaiOS அம்சம் கொண்ட சாதனங்களிலும் வழங்கப்படுகிறது. வாட்ஸ்ஆப்-ல் பல அம்சங்கள் பயனர்களுக்கு உதவும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்களும் அவ்வபோது அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலியில் வாட்ஸ்அப் செயலி முக்கிய இடத்தில் உள்ளது. பல கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாதிப் பட்டியலில் திருத்தம் – முக்கிய அறிவுறுத்தல்!

கடந்த 2016ம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் அதன் மெசேஜ்களுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்கி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் ஒரு நாளில் 2 பில்லியனுக்கும் அதிகமான யூஸர்களிடையே பரிமாறி கொள்ளப்படும், 100 பில்லியனுக்கும் அதிகமான மெசேஜ்கள் பாதுகாக்கப்படுகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல், வாட்ஸ்அப் பயனர்கள் கிளவுடில் ஸ்டோர் செய்யும் சேட் பேக்கப்ஸ்களுக்கும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பு இருப்பது அவசியம் என்று கோரிக்கை வைத்தனர்.

தமிழக அரசு பள்ளிகளில் நவம்பர் வரை மாணவர் சேர்க்கை – அனுமதி வழங்கல்!

இதன் மூலம் கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற கிளவுட் ஸ்டோரேஜ் வழங்குநர்கள் உட்பட மூன்றாம் தரப்பால் அணுகப்படுவதிலிருந்து தங்கள் பேக்கப்ஸ்களை பாதுகாக்க யூசர்களுக்கு இந்த புதிய அம்சம் உதவும் என்று அறிவித்தது. பேக்கப்ஸ்களில் ஸ்டார் செய்யபட்ட, சேட் ஹிஸ்ட்ரியை பாதுகாக்கவும் பயன்படும். ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க், வாட்ஸ்அப் கிளவுட் பேக்கப்களுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பை வெளியிடுவதாக அறிவித்துள்ளார். விரைவில் உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வரும் என்றும் கூறினார்.

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை ஆக்டிவேட் செய்யும் முறை:
  • உங்கள் வாட்ஸ்அப் செயலியில் உள்ளே சென்று, அங்கு இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.
  • Settings-ல் உள்ள Chats பகுதிக்கு செல்ல வேண்டும்.
  • அங்கு கீழே இருக்கும், Chat Backups-ற்கு சென்று End-to-End encrypted backups-ற்கு செல்ல வேண்டும்.
  • பின்னர் அங்கு அறிவுறுத்தப்படும் வழிமுறைகளை முறையாக செய்ய வேண்டும்.
  • அனைத்து வழிமுறைகளும் முடிந்த பின்னர் done என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, உங்கள் எண்ட்-டு-எண்ட் பேக்கப்பை வாட்ஸ்அப் தயார் செய்வதை காணலாம்.
  • பாஸ்வேர்ட் அல்லது கீயை மறந்துவிட்டால் உங்களின் End-to-End encrypted backup-ஐ மீட்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!