தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாதிப் பட்டியலில் திருத்தம் – முக்கிய அறிவுறுத்தல்!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாதிப் பட்டியலில் திருத்தம் - முக்கிய அறிவுறுத்தல்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாதிப் பட்டியலில் திருத்தம் - முக்கிய அறிவுறுத்தல்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாதிப் பட்டியலில் திருத்தம் – முக்கிய அறிவுறுத்தல்!

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் எமிஸ் இணையதளத்தில் பள்ளி மாணவா்களுக்கான ஜாதி பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஜாதிப் பட்டியல்:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு சேகரிக்கப்படுகிறது. எமிஸ் இணையதளத்தில் ஒவ்வொரு மாணவர்களின் பெயர், முகவரி, பயிலும் வகுப்பு, பிறந்த தேதி, பெற்றோர்களின் பெயர், சாதி, மதம் போன்ற அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும். கடந்த மாதம் பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு பணியாக தொடக்கக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளி மாணவர்களின் விவரங்களை வகுப்பு வாரியாகவும் மற்றும் அவர்கள் பயிலும் மொழி வாரியாகவும் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டார்.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியீடு!

மேலும் பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை மாணவர்கள் விகித அடிப்படையில் கணக்கெடுப்பு அதை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து தற்போது எமிஸ் இணையதளத்தில் மாணவர்களின் சாதி பெயா்களை திருத்தம் செய்து பட்டியலிட தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் நவம்பர் வரை மாணவர் சேர்க்கை – அனுமதி வழங்கல்!

வன்னியா் பிரிவில் வரும் ஜாதிகளை இணைத்து எம்.பி.சி., வன்னியா் பிரிவு பட்டியலில் கவனமாக சோ்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் பட்டியலில் உள்ள கல்லாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய ஜாதிகளை இணைத்து, தேவேந்திர குல வேளாளா் என்ற தலைப்பில் சோ்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!