‘பத்ம விருதுகள்’ 2021 பட்டியல் – மத்திய அரசு வெளியீடு!!

0
'பத்ம விருதுகள்' 2021 பட்டியல் - மத்திய அரசு வெளியீடு!!
'பத்ம விருதுகள்' 2021 பட்டியல் - மத்திய அரசு வெளியீடு!!
‘பத்ம விருதுகள்’ 2021 பட்டியல் – மத்திய அரசு வெளியீடு!!

இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பத்ம விருதுகள் குறித்த அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு அந்த விருதுகள் தமிழகத்தை சேர்ந்த பலருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பாக எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன், சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ, பாடகி சித்ராவிற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விருதுகள்:

இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் இருந்து பெரும் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதற்கு அடுத்த நிலையில் உள்ள விருதுகள் பத்ம விபூசண், பத்ம பூசண், பத்மஸ்ரீ ஆகியவை. அவை பத்ம விருதுகள் என அழைக்கப்படுகின்றன. அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை, சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படும் கலைஞர்களை கண்டறிந்து இந்த விருது வழங்கப்படுகிறது.

ஜூன் 17 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – UK பிரதமர் அறிவிப்பு!!

இந்த ஆண்டு வழங்கப்படும் விருதுகள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்ட நிலையில் தமிழகத்தை சேர்ந்த பலருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக பத்ம ஸ்ரீ விருது, பட்டிமன்ற நடுவரும் தமிழ் பேராசிரியருமான சாலமன் பாப்பையா அவர்களுக்கும், தமிழகத்தை சேர்ந்த வேளாண் துறையில் புகழ்பெற்ற பாப்பம்மாள் அவர்களுக்கும்,

தமிழகத்தைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களுக்கும், வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பத்ம விபூஷன் விருது, மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அடுத்ததாக பத்ம பூஷன் விருது, பிரபல பின்னணி பாடகி சித்ரா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறந்த 5 நாளில் 6 பேருக்கு கொரோனா – பெற்றோர்கள் அதிர்ச்சி!!

மேலும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய https://padmaawards.gov.in/PDFS/2021AwardeesList.pdf இணையதளத்தை பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!