தமிழகத்தில் ரூ.42,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
தமிழகத்தில் ரூ.42,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழகத்தில் ரூ.42,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழகத்தில் ரூ.42,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

காரைக்குடியில் உள்ள CSIR கீழ் செயல்படும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. அதன் படி, Project Associate – I மற்றும் Senior Project Associate பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மத்திய அரசு வேலைவாய்ப்பு:

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் Project Associate – I மற்றும் Senior Project Associate ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Senior Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Physics பாடப்பிரிவில் M.Sc அல்லது Nanotechnology பாடப்பிரிவில் M.Tech Degree பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Project Associate – I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Biotechnology, Genomic Sciences பாடப்பிரிவில் M.Sc Degree பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Senior Project Associate பணிக்கு ரூ.42,000/- என்றும், Project Associate – I பணிக்கு ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணலின் போது அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை கொண்டு வர வேண்டும்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!