CBSE 12th Result 2021 (OUT) – சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
CBSE +2 தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு - ரோல் எண் விளக்கம்!
CBSE +2 தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு - ரோல் எண் விளக்கம்!
CBSE 12th Result 2021 (OUT) – சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

கொரோனாவால் ரத்து செய்யப்பட்டுள்ள CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 30) பிற்பகல் 2 மணியளவில் வெளியாகி உள்ளது.

தேர்வு முடிவுகள்

நாடு முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா நோய் தொற்றினால் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்த முடியாமல் போனது. இதை தொடர்ந்து பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வந்த சூழலில், CBSE மாணவர்களுக்கான தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கைகளும், விண்ணப்பங்களும் வலுப்பெற்றது. நீண்ட, நெடு நாட்கள் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னதாக CBSE தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

Tokyo Olympics: இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி – லவ்லினா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இதனிடையே CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக்காக தேர்வு முடிவுகளை ஜூலை 31 ஆம் தேதிக்குள் வெளியிடுவதாக கல்வி வாரியம் அறிவித்தது. இந்த மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக CBSE சார்ந்த அனைத்து பள்ளிகளுக்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் CBSE கல்வி வாரியம் அறிவித்துள்ள படி, ஜூலை 30 ஆம் தேதியான இன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியாகி உள்ளது.

கண்டோன்மெண்ட் ஆணையத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – ரூ.34,000/- ஊதியம்!!

இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbse.nic.in மற்றும் cbseresults.nic.in என்ற இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்காக மாணவர்களுக்கு ரோல் எண்கள் தேவை என்பதால் அதற்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுட்டுள்ளது. அந்த வகையில் ரோல் எண்ணை பெறுவதற்கு,

  • முதலாவது cbse.nic.in என்ற இணையத்தை திறக்கவும்.
  • அங்கு Roll Number Finder என கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
  • அதில் ஒரு புதிய பக்கம் திறக்கும்.
  • அதில் Continue என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
  • அடுத்து, வகுப்பு 10 அல்லது வகுப்பு 12 ஐ தேர்வு செய்யவும்
  • பின்பு மாணவரின் பெயர், தந்தை பெயர், பள்ளி குறியீடு, பிறந்த தேதி மற்றும் தாயின் பெயர் போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும்.
  • பின்னர் Search Data என்பதை கிளிக் செய்து வகுப்பு 10 அல்லது வகுப்பு 12 க்கான ரோல் எண்ணை பெற்றுக் கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!