WhatsApp Payment இல் கிடைக்கும் கேஷ்பேக் – சூப்பர் ஆஃபர் அறிமுகம்!

0
WhatsApp Payment இல் கிடைக்கும் கேஷ்பேக் - சூப்பர் ஆஃபர் அறிமுகம்!
WhatsApp Payment இல் கிடைக்கும் கேஷ்பேக் - சூப்பர் ஆஃபர் அறிமுகம்!
WhatsApp Payment இல் கிடைக்கும் கேஷ்பேக் – சூப்பர் ஆஃபர் அறிமுகம்!

WhatsApp Payment மூலம் பணம் செலுத்தும் பயனர்களுக்கு கேஷ்பேக் வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது கேஷ்பேக் வசதி சோதனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

கேஷ்பேக்:

மொபைல் போனில் WhatsApp ன் பங்கு இன்றியமையாதது. மக்கள் அனைவரும் அதிகமாக WhatsApp பயன்படுத்துவதால் அடிக்கடி பல்வேறு புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. WhatsApp வழங்கிய குரூப் வீடியோ கால் வசதி பெரும் வரவேற்பை பெற்று வந்த நிலையில் WhatsApp Payment பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் WhatsApp Payment நீண்ட நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டாலும் பயனர்களை பெரிதும் சென்றடையவில்லை.

வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கும் முறை – முழு விபரம் இதோ!

Payment செய்வதில் தற்போது Google pay மற்றும் Phone pay மக்களிடையே அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதிகமாக பயனர்களை பெறுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கேஷ்பேக் திட்டத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்தியாவில் WhatsApp Pay மற்ற செயலிகள் போலவே UPI யில் வேலை செய்கிறது. புதிய கேஷ்பேக் அம்சமானது தற்போது சோதனையில் உள்ளது என WABetaInfo கூறியுள்ளது.

நவ.15ம் தேதி தொடக்கப் பள்ளிகள், அங்கன்வாடிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

ஸ்கிரீன் ஷாட்டில் ‘Get cashback on your next payment’ மற்றும் ‘to get started ‘ என்ற செய்தியுடன் ஒரு பரிசு ஐகான் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் WhatsApp பயன்படுத்தி payment செய்பவர்களுக்கு ரூ.10 கேஷ்பேக் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு பேமெண்டிலும் அல்லது முதல் முறையாக கிடைக்குமா என்பது குறித்து தகவல்கள் ஏதும் கூறப்படவில்லை. அதனை தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வழங்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!