செப்.27 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
செப்.27 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
செப்.27 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
செப்.27 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இமாச்சலப் பிரதேசத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 27ம் தேதி முதல் மீண்டும் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்க இருப்பதாகவும், அதற்கான பாதுகாப்பு வரைமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

இமாச்சலில் கொரோனா தொற்றின் 2ம் அலை காரணமாக முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் பாதிப்பு நிலவரம் குறைந்துள்ளது. மாநிலத்தில் தற்போது வரை கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,662 ஆகும். இதனால் இறப்பு விகிதம் 1.62% ஆக உள்ளது. இந்நிலையில் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் முன்னிலையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் மாநிலத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.

WhatsApp Payment இல் கிடைக்கும் கேஷ்பேக் – சூப்பர் ஆஃபர் அறிமுகம்!

அதன்படி, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 27ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். அதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளிலும், 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அறிவித்துள்ள அனைத்து முறையான கோவிட் -19 நெறிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கும் முறை – முழு விபரம் இதோ!

சமீபத்தில் மாநிலத்தில், கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் செப்டம்பர் 25 வரை பள்ளிகளை மூட அரசு முடிவு செய்தது. இதனால் நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது. மேலும், 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் 8,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!