வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கும் முறை – முழு விபரம் இதோ!

0
வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கும் முறை - முழு விபரம் இதோ!
வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கும் முறை - முழு விபரம் இதோ!
வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கும் முறை – முழு விபரம் இதோ!

இந்திய அரசால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை எதிர்பாராத விதமாக தொலைந்தால் தொலைந்து விட்டால் டூப்ளிகேட் வாக்காளர் அடையாள அட்டைக்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். அதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

வாக்காளர் அடையாள அட்டை:

இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்களுக்கு அரசால் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இது முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. இதன் மூலம் இந்திய குடிமக்கள் அனைத்து தேர்தலிலும் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது இந்தியாவில் ஆன்லைன் மூலம் எளிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் அவ்வப்போது தேவைப்படும் விவரங்களையும் மாற்றிக்கொள்ளலாம். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து போனாலோ அல்லது கிழிந்து விட்டாலோ ஆன்லைன் மூலம் டூப்ளிகேட் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

நவ.15ம் தேதி தொடக்கப் பள்ளிகள், அங்கன்வாடிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மட்டும் யூனியன் பிரதேசங்களிலும் நகல் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது. சமீபத்தில் அனைத்து வாக்காளர்களுக்கும் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

  • முதலில் EPIC-002 போரம் நகலைப் பதிவிறக்கவும் அதில் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து அதனுடன் ஆவணங்களை இணைக்கவும்.
  • முக்கிய ஆவணங்கள் என்பது FIR நகல், முகவரி சான்று மற்றும் அடையாள சான்று ஆகியவை ஆகும்.
  • போரம் உங்கள் உள்ளூர் தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அப்போது உங்களுக்கு ஒரு ஆதார் எண் வழங்கப்படும்.
  • இந்த எண்ணைப் பயன்படுத்தி மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம்.
  • விண்ணப்பிக்கும் நபர் மாநில பெயர், முழு பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் நகல் அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான காரணம் உள்ளிட்ட சில விவரங்களை அளிக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!