அரசு ஊழியர்களுக்கு கூடுதல் நேர கொடுப்பனவு பெறுவது குறித்த வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு!

0
அரசு ஊழியர்களுக்கு கூடுதல் நேர கொடுப்பனவு பெறுவது குறித்த வழக்கு - நீதிமன்றம் புதிய உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு கூடுதல் நேர கொடுப்பனவு பெறுவது குறித்த வழக்கு - நீதிமன்றம் புதிய உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு கூடுதல் நேர கொடுப்பனவு பெறுவது குறித்த வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு!

நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் கூடுதல் நேர கொடுப்பனவு பெறுவது குறித்து மும்பை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது

நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் தொழிற்சாலைகள் சட்டத்தின் படி அரசு ஊழியர்கள் கூடுதல் நேர கொடுப்பனவு பெற தகுதியானவர்களா என மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் Security Printing & Minting Corporation of India நிறுவனத்தின் மேற்பார்வையாளர்களுக்கு கூடுதல் நேர கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதிரடியாய் குறைந்த தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

அதில் அரசு ஊழியர்கள் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் கூடுதல் நேர கொடுப்பனவு பெற தகுதியானவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் வி.சுப்பிரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில் அரசு ஊழியர்களுக்கு தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் கூடுதல் நேர கொடுப்பனவு வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து இருக்கிறது. மேலும் தொழிற்சாலைகள், தொழில்துறை நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை போல அல்லாமல், அரசு ஊழியர்கள் எந்த நேரத்திலும் அரசின் தேவைக்கு ஏற்ப வேலை செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!