வாகனம் ஓட்டும் மைனர்களுக்கு ரூ.25,000/- அபராதம் – புதிய விதிமுறைகள் இதோ!

0
வாகனம் ஓட்டும் மைனர்களுக்கு ரூ.25,000/- அபராதம் - புதிய விதிமுறைகள் இதோ!

ஜூன் 1 முதல் ஓட்டுநர் உரிமம் பெற விரும்புபவர்கள் தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் ஓட்டுநர் தேர்வில் பங்கேற்க முடியும்.

ஓட்டுநர் உரிமம்:

சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயக்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயமானதாகும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஓட்டுநர் உரிமம் பெறுவது என்பது கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து எல்.எல்.ஆர். பதிவு செய்ய வேண்டும். பின்னர் வாகன ஆய்வாளர் முன்பு ஓட்டிக் காட்டி, போட்டோ எடுத்துக் கொண்ட பின் நேரில் சென்று ஓட்டுநர் உரிமம் பெற்று கொள்ள வேண்டும்.

IOB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 – வயது வரம்பு, ஊதியம் குறித்த முழு விவரங்களுடன்!

இதை எளிமையாக்கும் விதமாக ஜூன் 1 முதல் புதிய விதிமுறைகள் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓட்டுநர் உரிமம் பெற விரும்புபவர்கள் தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் ஓட்டுநர் தேர்வில் பங்கேற்கலாம். உரிமத் தகுதிக்கான சோதனைகளை நடத்தி சான்றிதழ் வழங்க தனியார் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000/- முதல் 2,000/- அபராதமும், வாகனம் ஓட்டும் மைனர் பிடிபட்டால் அவர்களுக்கு ரூ.25,000/- அபராதமாக விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பயிற்சி நிறுவனங்களுக்கும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!