தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 60 ஆம்னி பேருந்துகள் மீது வழக்கு – அரசு அதிரடி!

0
தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 60 ஆம்னி பேருந்துகள் மீது வழக்கு - அரசு அதிரடி!
தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 60 ஆம்னி பேருந்துகள் மீது வழக்கு - அரசு அதிரடி!
தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த 60 ஆம்னி பேருந்துகள் மீது வழக்கு – அரசு அதிரடி!

தமிழகத்தில் இந்த வாரம் தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்த 60 ஆம்னி பேருந்துகள் மீது போக்குவரத்து துறையினர் வழக்கு தொடர்ந்து இருக்கின்றனர். இது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்

ஆம்னி பேருந்துகள்:

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை சுதந்திர தினம் என்பதால் மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் சொந்த ஊரை விட்டு பெரிய நகரங்களுக்கு வேலைக்கு வந்தவர்கள், சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுகின்றனர். இந்நிலையில் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்கள் முடிவடைந்த நிலையில் காத்திருப்பு பட்டியலும் நீண்டு கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் ஆம்னி தனியார் பேருந்துகளை நாடி இருக்கின்றனர்.

அதை சாதகமாக பயன்படுத்தி தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததை அடுத்து அரசு இது குறித்து எச்சரிக்கை விடுத்தது. இதுகுறித்து கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் 5 குழுவாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இணை ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலையில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நடத்தப்பட்டது. மொத்தமாக 259 ஆம்னி பஸ்களில் கூடுதல் கடடணம் வசூலித்தார்களா என்பது குறித்து பயணிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் 21 ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.அதன்படி வழக்கமாக வசூலித்த கட்டணத்தை விட கூடுதலாக வாங்கிய தொகையை பயணிகளுக்கு அதிகாரிகள் உடனடியாக திருப்பி கொடுக்க ஏற்பாடு செய்தனர்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று குறைதீர் முகாம்!

Exams Daily Mobile App Download

மேலும் பயணிகளுக்கு ரூ.11,300 கட்டணம் திருப்பி கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் வரி கட்டாத ஒரு ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்கி வந்த 60 ஆம்னி பஸ்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து துறையின் விதியை மீறி செயல்பட்டதாக ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டன. இந்த நடவடிக்கை சென்னையில் வடக்கு மண்டலத்தில் மட்டும் நடந்த சோதனையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு மண்டலத்திலும் வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை சோதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here