
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – தொடர் தோல்வி குறித்து மனம் திறந்த கேப்டன் ஜடேஜா!
கடந்த 3 ஆட்டங்களை தொடர் தோல்வியில் முடித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் வலுவாக வரும் என்றும், காயத்தில் இருந்து சிகிச்சை பெற்று திரும்பி வந்துள்ள ஓப்பனர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கேப்டன் ஜடேஜா கூறி இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சீஸனின் முதல் 3 ஆட்டங்களை தோல்வியில் முடித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் மோசமான ஆட்டத்திற்கு பிறகும் அவர் அணியில் தொடருவார் என்று கேப்டன் ரவீந்திர ஜடேஜா விளக்கம் அளித்துள்ளார். நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ருதுராஜ் கெய்க்வாட் காயத்திற்கு பிறகு மீண்டும் IPL தொடரில் இணைந்திருக்கும் நிலையில் அவர் தனது முதல் இரண்டு ஆட்டங்களில் 0 மற்றும் 1 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்திருந்தார். ஏனென்றால் இந்த 2 ஆட்டத்திலும் CSK அணி தோல்வியடைந்திருந்தது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கம் – அரசாணை வெளியீடு!
இதனை தொடர்ந்து நேற்று (ஏப்ரல்.3) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கெய்க்வாட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தவிர பேட்டிங் பிரிவில் ஏகப்பட்ட குளறுபடிகள் காணப்பட்டிருந்தது. இதனால் பவர் பிளேயில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் 54 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தொடர் தோல்விக்கு பிறகு CSK அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பேசுகையில், ‘நாங்கள் பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை இழந்தோம்.
இந்த ஆட்டத்தில் பந்தின் வேகத்தை சரியாக கணிக்க முடியவில்லை. இருந்தாலும் இன்னும் வலுவாக மீண்டு வருவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். நாங்கள் கெய்க்வாட்டுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும். அவரை நிச்சயமாக ஆதரிப்போம். அவர் ஒரு சிறந்த வீரர் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். அவர் நன்றாக வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார். இதற்கிடையில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இடது கை பேட்டர் சிவம் துபே மட்டும் ஆறு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களை விளாசி இருந்தார்.
குறிப்பாக MS தோனியுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிய அவர் 26 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். இது பற்றி ஜடேஜா கூறும் போது, ‘இன்று அவர் மிகவும் நன்றாக பேட்டிங் செய்தார். அவரை ஒரு நல்ல மனநிலையில் வைத்திருப்பது முக்கியமாக இருக்கும். நிச்சயமாக நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம். கடினமாக உழைத்து வலுவாக மீண்டு வருவோம்’ என்று ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சென்னை அணி அடுத்ததாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் ஏப்ரல் 9ம் தேதி நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் மோதவிருக்கிறது.